தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் இப்போது தமிழக முதல்வராகி இருக்கிறார். உதவி இயக்குனராக இருந்த எஸ் ஏ சந்திரசேகர் மகனாகப் பிறந்த விஜய், கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். அவரை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்றுதான் அவரது பெற்றோர் விரும்பினர்.
இந்த நிலையில் அவர் திரைப்பட நடிகராக வேண்டும் என்று விரும்பியதால் அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நாளைய தீர்ப்பு படம் மூலம் அவரை ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். சினிமாவில் பெரிய புகழ் அடைந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் இயக்கத்தை தொடங்கி தமிழகத்தின் முதல்வராகி இருக்கிறார்.
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பாவை போல சினிமாவில் நடிக்க விரும்பாமல் திரைப்பட இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல தானும் ஒரு பெரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இளம் வயதிலேயே குறும்படங்களை இயக்கினார். வெளிநாட்டில் டைரக்சன் குறித்த படிப்புகளையும் படித்து முடித்தார்.
இதையடுத்து லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிக்மா என்ற படத்தை ஜேசன் சஞ்சய் தனது முதல் படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் பரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜசுந்தரம் சம்பத்ராஜ் ஷிவ் பண்டித் அன்பு தாசன் யோகி ஜாபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சிக்மா படம் வருகிற ஜூலை 31ம் தேதி ரிலீஸ் என படக்குழு தரப்பில் அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 18ம் தேதி முதல்வர் விஜய் பிறந்த நாளான அன்று அவர் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 31ம் தேதி அவரது மகன் இயக்கிய முதல் படமான சிக்மா படம் வெளியாகிறது.
ஆனால் இதுவரை தனது மகன் குறித்தும் அவர் இயக்கிய சிக்மா படம் குறித்தும் நடிகராகவோ முதல்வராகவோ விஜய் எந்த இடத்திலும் பேசவில்லை. வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. படம் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்த தேதியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.





