- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய முதல் குழந்தை இறப்பதற்கு காரணம் விஜய்தான் - பிக்பாஸ் ஜூலி பகிரங்க குற்றச்சாட்டு!

என்னுடைய முதல் குழந்தை இறப்பதற்கு காரணம் விஜய்தான் – பிக்பாஸ் ஜூலி பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜூலி. சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். பெண் ஒருவரிடம் ஜூலி கிட்னி தருவதாக கூறி அவரிடம் 15 லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்தும் தவெக கட்சி குறித்தும் பிக்பாஸ் ஜூலி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. இதனால் தவெக கட்சியினரும் விஜய் ரசிகர்களும் பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது கணவர் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

இதையடுத்து தன் மீது அவதூறு பரப்பவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடுமாறு ஜூலி தனது கணவருடன் நேரில் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் அவரது புகார் மனுவை பரிசீலித்து ஏற்றுக்கொள்ள காவல் துறை மறுத்துவிட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பிக் பாஸ் ஜூலி பேசினார்.

அப்போது ஜூலி கூறியதாவது, கிட்னிக்காக நான் எந்த விதத்திலும் யாருக்கும் நான் உதவியது இல்லை. குழந்தைகளுக்கான லிவர் ஆபரேஷனுக்காக நிதி திரட்டுவதற்காக நான் வீடியோ போட்டு இருக்கிறேன். அதற்கான எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள ராதிகா என்பவருக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.

- Advertisement -

நான் நர்ஸ் ஆக வேலை பார்த்த ஒரே காரணத்திற்காக என்னை கிட்னி திருடி என்று சொல்வதா? இது தொடர்பாக நான் கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்க வந்தபோது என் குழந்தையை இழந்து விட்டேன். எனக்கு இப்போது தான் திருமணம் ஆகி இருக்கிறது. என்னுடைய முதல் குழந்தையை நான் இழந்து இருக்கிறேன். என் குழந்தையை கொன்றது விஜய் அண்ணா தான்.

தவெக கட்சிக்கு எதிராக பேசிய ஒரே காரணத்துக்காக ஒரு பெண்ணின் கேரக்டரை அசிங்கப்படுத்தாதீங்க. சமூக வலைதளத்தில் என்னை அடித்து அடித்து அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் என் குழந்தை இறந்தது. விஜய் தனது கட்சிக்கு எதிராக பேசுவார்கள் மீது இன்ஸ்டாகிராமில் தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணலாம் என்று பிக்பாஸ் ஜூலி அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்