- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு - தனது தாயார் மறைவு...

இது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு – தனது தாயார் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரின் தாயார் நேற்று காலை வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் அஜீத்குமார் துபாயில் இருந்த நிலையில் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தார். தமிழக முதல்வர் விஜய் அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆதல் தெரிவித்தார். இன்று அஜீத்குமாரின் தாயார் இறுதி சடங்குகள் நடக்கின்றன.

தனது தாயார் மோகினி மணி மறைவு குறித்து நடிகர் அஜீத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அனுப்குமார் அனில் குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எங்கள் அன்புத் தாயார் மோகினி வயது 89 கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை தனது உறக்கத்திலேயே இயற்கை எய்தினார்.

- Advertisement -

இந்த துயரமான தருணத்திலும் அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததையும் அன்பும் அக்கறையும் நிறைந்த உறவுகளால் சூழப்பட்டிருந்ததையும் அவரை அறிந்த அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்றிருந்ததையும் நினைத்து ஆறுதல் அடைகிறோம். எங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அடைந்துள்ள வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணம் அவர்தான்.

எங்கள் மறைந்த தந்தையாருடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் நீண்ட இனிய தம்பதி வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அவர்கள் இணைந்து பகிர்ந்து கொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளித்துக்கொண்டே இருக்கும்.

- Advertisement -

எங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் அன்பான இரங்கல் செய்திகள் ஆறுதல் வார்த்தைகளால் நெகிழ்ந்து போய் உள்ளோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவும் அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதில் அளிக்கவும் இயலாமல் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அவரது சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும் எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு கற்றுத்தந்த சமநிலை கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவை போற்றுவார்கள் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்