மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் அமலாபால். பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் விதார்த் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்தின் கதை இரண்டு வரிதான். ஆனால் அதை திரைக்கதையில் சொன்ன விதமும், படத்தில் நடித்த கேரக்டர்களும், குறிப்பாக இசையும், பாடல்களும் படத்தை வேற லெவலில் ஜெயிக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய், தனுஷ், ஆர்யா என நடித்த அமலாபால், தலைவா படத்தில் விஜயுடன் நடித்தார். அந்த படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய்க்கும், அமலாபாலுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு தீவிரம் காட்டி அமலாபால், ஆடை என்ற படத்தில் சில காட்சிகளில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுவரை தமிழில் நடித்த நடிகைகள் யாரும் இந்தளவுக்கு நடித்தது இல்லை. உதட்டு முத்தக்காட்சிகளில் கூட சில நடிகைகள்தான் முன்வந்து நடித்தனர். ஆனால் அமலாபால் ஆடையின்றி நடித்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இதற்கிடையே கடந்த ஆண்டில் கோவாவை சேர்ந்த ஜகத் தேசாய் என்ற தொழிலதிபரை அமலாபால் திருமணம் செய்துக்கொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால் அதற்கு முன்பே வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை அமலாபால் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியானது. அதனால் ஜகத் தேசாய் 2வது கணவரா, 3வது கணவரா என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது சில மாதங்களாக அமலாபால், கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அதுவும் முண்டா பனியன் ஒன்றை போட்டுக்கொண்டு ஜட்டி அணிந்தபடி, அவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுவும் தனது கணவருடன், கட்டிப்பிடித்தபடி முத்தமிட்டபடி அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அடல்ட் ஒன்லியாகதான் இருக்கின்றன.
இப்போது அமலாபால் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கிறார். இந்த நேரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை மிக சிறப்பான முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் நைட் பார்ட்டி ஒன்றில், நட்சத்திர கிளப்பில் தன் கணவருடன் சேர்ந்துக்கொண்டு குத்தாட்டம் போடுகிறார் அமலபால். அருகில் இருக்கும் அவரது கணவரும், சேர்ந்துக்கொண்டு ஆடுகிறார். இதை பார்த்த பலரும், 7 மாத கர்ப்பிணிப் பெண் செய்கிற வேலையா இது, என தலையில் அடித்துக்கொள்கின்றனர்.





