மலையாள பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிகை மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து திரிஷ்யம் 2 திரிஷ்யம் 3 இதுவரை 3 பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அந்த படங்கள் பெற்றிருக்கின்றன.
திரிஷ்யம் படங்களில் நாயகன் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அன்சிபா ஹாசன். இவர் கடந்த ஆண்டு மலையாள நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்து சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அன்சிபா ஹாசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் சிலர் தன் மீது பொய்யான புகார் அளித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதுதான் ராஜினாமா செய்வதற்கு காரணம் என்றும் அன்சிபா ஹாசன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தன் மீது காவல்துறையில் பொய் புகார் அளித்த அம்மா அமைப்பின் துணைத் தலைவர் லட்சுமி பிரியா மற்றும் அந்த புகாரை விசாரிப்பதற்காக தன்னை காவல் நிலையத்திற்கு வரவழைத்து டார்ச்சர் செய்த திருப்பணித்துறா காவல் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா மற்றும் இந்த விவகாரத்தில் ஒருதலை பட்சமாக செயல்படும் நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 3 பேர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.
தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் காவல் நிலையத்தில் வைத்து மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறி சமீபத்தில் கேரளாவில் முதல்வராக பொறுப்பேற்ற விடி சதீஷினிடம் அவர் புகார் அளித்திருக்கிறார். இப்படி நேரடியாக முதலமைச்சரிடமே புகார் கொடுத்ததை அடுத்து நடிகர் சங்கத் தலைவர் ஸ்வேதா மேனன் அன்சிபாவிடம் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அவரை நடிகர் சங்கத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த நடிகை ஹன்சிபா ஹாசன் கூறுகையில் இந்த விசாரணை கூட்டத்தில் கலந்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆனால் விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தனக்கு நீதி கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளார். இது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





