- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படங்கள் எல்லாம் பட்டிக்காட்டான் படங்களை போல இருக்கும் - நடிகர் தனுஷின் அப்பா இயக்குனர்...

அந்த படங்கள் எல்லாம் பட்டிக்காட்டான் படங்களை போல இருக்கும் – நடிகர் தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவரது தந்தை இயக்குனர் மற்றும் நடிகர் கஸ்தூரிராஜா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியதாவது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம்.வருங்காலத்தில் தனுஷ் மகன் சினிமாவுக்கு வரலாம். இப்போது மகள் வழி பேரன் பவிஷ் படங்களில் நடித்து வருகிறார். தனுஷின் நிஜப் பெயர் வெங்கடேச பிரபு. சினிமாவுக்காக தனுஷ் என்று மாற்றிக் கொண்டார்.

- Advertisement -

ஆனால் இப்போது ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் தனுஷ் கே ராஜா என்று தான் அவரை அழைக்கிறார்கள். என் பேரோடு அவர் பெயரை இணைத்து அழைப்பது எனக்கு பெருமை. நான் தேனியில் இருந்து சென்னைக்கு வர 50 ரூபாய் கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். 19 வயதில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. 3 வயதில் செல்வராகவன் அப்போது கைகுழந்தையாக இருந்தார்.

அந்த சமயத்தில் தான் என் மனைவி விஜயலட்சுமி ஆதரவுடன் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு இயக்குனர் ஆனேன். துள்ளுவதோ இளமை படம் எங்கள் குடும்பத்தை மாற்றியது. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த செல்வராகவன் சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட போது முதலில் படி அப்புறம் தான் சினிமா என்றேன். அவரும் கோல்டு மெடல் வாங்கி காதல் கொண்டேன் படம் மூலம் சினிமாவுக்குள் வந்தார்.

- Advertisement -

அந்த படம் எடுக்க 4 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். என் மகள்கள் அண்ணன் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அந்த படத்தின் வெற்றி எங்கள் குடும்பத்தின் நிலையை மாற்றியது. என் 2 மகள்களும் இப்போது சென்னையில் புகழ்பெற்ற டாக்டர்களாக இருக்கிறார்கள். என் மகள் வழி பேரன் பவிஷ் நடித்து வருகிறார். இன்னொரு பேரன் உதவி இயக்குனராக இருக்கிறார். நானும் ஹபிபீ படத்தில் நடித்துள்ளேன்.

இப்போது என் வயது 72. என்னுடைய படங்கள் எல்லாம் வேறு மாதிரி பட்டிக்காட்டான் படம் எடுத்த மாதிரி இருக்கும். என் வாரிசுகள் படங்கள் வேறு. காதலும் கல்வியும் முக்கியமானது. இப்போது பெண்களும் நிறைய படிக்கிறார்கள். அனைவரும் கல்வியில் சாதிக்க வேண்டும். கல்விதான் என்னை இந்த நிலைக்கு மாற்றியது. நான் காதல் காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் விட்டவன் என்று இயக்குனர் கஸ்தூரிராஜா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்