- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நீடிக்கும் பதட்டம், தக்லைஃப் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு...

இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நீடிக்கும் பதட்டம், தக்லைஃப் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் தக்லைஃப் வருகிற ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.

தக்லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் முதன்முறையாக நடிகர் சிலம்பரசன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் அசோக் செல்வன் அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜிங்குச்சா என்ற பாடல் ஏற்கனவே வெளியாக இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1987ம் ஆண்டில் வெளியான படம் நாயகன். இளையராஜா இசையில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதை பெற்றுத் தந்தது. மும்பையை சேர்ந்த தாதா வரதராஜ முதலியார் கேரக்டரில் வேலு நாயக்கராக கமல் வாழ்ந்து காட்டியிருந்தார்.

அதன்பிறகு 37 ஆண்டுகளுக்கு பின் தக்லைஃப் படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் மீண்டும் இணைந்துள்ளனர். அதனால் நாயகன் படம் போலவே நடிகர் கமல்ஹாசனுக்கு தக்லைஃப் படம் மீண்டும் ஒரு தேசிய விருதை பெற்றுத் தருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே வருகிற 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை தக்லைஃப் படக்குழுவினர் செய்து வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த இசை வெளியீட்டு விழா நடக்காது என்ற அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் போர் பதட்டம் நீடித்து வருவதால் இத்தகைய ஒரு பதட்டமான சூழலில், இந்த இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம், வருகிற 16ம் தேதி நடக்க இருந்த தக்லைஃப் இசை வெளியீட்டு விழா தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது கமல் சிம்பு ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்