கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தமிழக முதல்வராக உள்ள விஜய் இன்று மாலை திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது முதல்வர் விஜய் பேசியதாவது, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றி மற்றும் ஸ்பெஷல் வணக்கம். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் இந்த விஜயின் இதயம் திருச்சி கிழக்கு. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 6 மாத காலம் அமைதியாக இருப்போம் என்றார்கள்.
ஆனால் 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் 6 நாட்கள் கூட இருக்கவில்லை. கல்யாண வீட்டில் எல்லாம் சென்று போய் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் எல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
இரண்டு கட்சிகளும் வேண்டாம் என எங்களை கொண்டு வந்துள்ளனர் மக்கள். தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்த தலைவர்கள், இயக்கங்களுக்கு நன்றி. எம்ஜிஆர் முதல் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட தவெக அதிகம் வாக்குகளை பெற்றுள்ளது.
எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை. எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம். ஆதரித்த மக்கள் இன்னும் கொஞ்சம் தவெகவை அதிகம் ஆதரித்து இருக்கலாம். எதிர்கால தேர்தல்களில் தவெகவிற்கு மக்கள் அதிகம் வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன்.
தவெகவை பற்றி என்னை பற்றி தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டே இருங்கள். என்னை கிண்டல் செய்து கொண்டிருப்பவர்கள் தான் எனக்கான எனர்ஜி. என்னை கிண்டல் செய்தாலும் மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருப்பேன் என்று முதல்வர் விஜய் பேசினார்.





