திருச்சியில் இன்று மாலை நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தவெக கட்சியின் தலைவர் முதல்வர் விஜய் பேசியதாவது, நான் கோட் அணிவதை பற்றி சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஏன் நாங்கள் எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா?
நான் கோட் சூட் போடுவதை எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். அதுவும் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே நான் கோட் போடுகிறேன். கலர் கலராக போடுவது இல்லை, உழைக்கும் வேலையை மட்டும் பார்க்குமாறு என்னை மக்கள் கூறுகிறார்கள்.
என்னை பற்றி பேசுபவர்களை இனி மக்கள் பார்த்துக் கொள்வார்கள். எனக்கு எதிரிகளே இல்லை என நினைக்கவே மாட்டேன். எப்பவும் தவெக – திமுக இடையே தான் போட்டி. தேர்தலுக்கு முன்பு அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து விஜய் ஆட்சி வரக்கூடாது என கூத்து செய்தனர்.
தவெக – திமுக இடையிலான போட்டி தான் தொடர்கிறது. எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி. இடையில் வேறு யாரும் இல்லை. எனக்கும் திமுகவுக்கும் இடையே யார் வந்தாலும் நிர்வாகம் பொறுப்பல்ல. அப்பவும் இப்பவும் எப்பவும் ரெண்டே ரெண்டு பேருக்கு இடையே தான் போட்டி.
ஜென்ஸி இளைஞர்களை கவர ஆங்கிலம் – தமிழ் கலந்து அறிக்கை வருகிறது. ஜென்ஸி இளைஞர்களை கவர்வதாக கூத்து செய்து கொண்டிருக்கிறார்கள். ரீல்ஸ் போட்டவர்கள் எல்லாம் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நியூஸ் பார்க்கிறார்கள்.
தற்குறி என கூறியவர்கள் திமுக தலைவர்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி விட்டனர். அரசியல் புரிதல் இல்லாமல் மக்கள் தவெகவிற்கு ஓட்டு போட்டுவிட்டதாக கூறுகின்றனர். கவர்ச்சியில் மயங்கி மக்கள் எனக்கு வாக்களித்துவிட்டார்களாம். தற்குறியாம் தற்குறி நல்லா வருகிறது, வேண்டாம்னு பார்க்கிறேன் என்று முதல்வர் விஜய் அந்த கூட்டத்தில் பேசினார்.





