- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சொன்ன அந்த இடம்தான் இது - தனது உதவியாளரிடம் அந்த ரகசியத்தை சொன்ன நடிகர்...

நான் சொன்ன அந்த இடம்தான் இது – தனது உதவியாளரிடம் அந்த ரகசியத்தை சொன்ன நடிகர் ரஜினிகாந்த் – அவரை சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடுவது இதனால்தானா?

- Advertisement -

பொதுவாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் பந்தா காட்டும் நபர்களாக தான் இருக்கின்றனர். பத்திரிகை ஊடகங்கள் முன்னால் பணிவு காட்டும் அவர்கள் நிஜத்தில் வேறு மாதிரியான மனிதர்களாக தான் தன் ரசிகர்களிடம் நடந்துக்கொள்கின்றனர். பல நூறு கி.மீ., பயணித்து வீடு தேடிச் செல்லும் தனது ரசிகர்களை காணக்கூட விரும்ப மாட்டார்கள்.

ஆனால் ரசிகர்களை தன் உயரத்துக்கு முக்கிய காரணம் என்று நன்றியுடன் நினைத்து பார்க்கும் நடிகர்கள் தமிழ் திரையுலகில் மிகவும் குறைவுதான். எம்ஜிஆர் விஜயகாந்த் ராமராஜன் கே பாக்யராஜ் பாண்டியராஜன் செந்தில் பிரபு முரளி போன்ற ஒரு சில ஹீரோக்கள் தான் ரசிகர்களை மதிக்ககூடியவர்கள்.

- Advertisement -

அந்த வரிசையில் ரஜினிகாந்தும் ரசிகர்கள் மீது தனி மரியாதை கொண்டவர்தான். ஆனால் அவர்கள் செய்யும் அன்புத்தொல்லை காரணமாக பல நேரங்களில் அவர்களை விட்டு அவர் விலகி நடந்துக்கொள்கிறார் என்பதும் உண்மை. ஏனென்றால் ரசிகர்கள் அவரை தொந்தரவு செய்யும் விதமாக நடந்துக்கொள்வதும் பல நேரங்களில் நடக்கிறது.

சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் எந்த இடத்திலும் தன்னை மிகப்பெரிய செல்வாக்குள்ள மனிதராக வெளிப்படுத்தி கொண்டது இல்லை. எப்போதும் அவரிடம் அந்த எளிமையும் யதார்த்தமும் இருக்கிறது என்று அவரிடம் பழகிய நண்பர்கள் நடிகர்கள் இன்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

நடிகர் ரஜினியிடம் பல ஆண்டுகளாக பர்சனல் அசிஸ்டெண்ட் அதாவது உதவியாளராக இருந்தவர் ஜெயராம். அவர் ஒரு நேர்காணலில் ரஜினி பற்றி கூறுகையில், ஒரு முறை நானும் ரஜினி சாரும் காரில் பயணித்தோம். கர்நாடகா மாநிலம் பெங்களுருவுக்கு சென்றோம்.

அப்போது ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்ன ரஜினிகாந்த், நான் பல நாட்கள் மூட்டை தூக்கிய இடம் இதுதான் என்று ஒரு இடத்தை காட்டி என்னிடம் சொன்னார். அவரது இப்போது இருக்கிற உயரத்துக்கு இதை எல்லாம் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னிடம் சொல்ல வேண்டியதும் இல்லை. அப்போதும் அந்த பழைய வாழ்க்கையை அவர் மறக்காமல் இருந்தது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்