- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்தன மர கடத்தல் வீரப்பனை காட்டுக்குள் சென்று சந்திக்க தயாரான நடிகர் ரஜினிகாந்த் - போனில்...

சந்தன மர கடத்தல் வீரப்பனை காட்டுக்குள் சென்று சந்திக்க தயாரான நடிகர் ரஜினிகாந்த் – போனில் அழைத்த கருணாநிதி, உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

இன்று முன்னாள் முதல்வர் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி 104வது பிறந்த நாள். இந்த நாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் கருணாநிதி குறித்த ஒரு முக்கிய சம்பவம் குறித்து நக்கீரன் கோபால் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறியதாவது, சந்தன கடத்தல் வீரப்பன் சந்திப்பு விவகாரத்தில் ஏதேனும் ஒரு விஷயம் தப்பாக நடந்திருந்தால் இன்று நான் இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட மிகவும் சென்சிடிவ் விஷயமாக அப்போது அது இருந்தது. இப்போது அந்த முக்கியத்துவம் தெரியவில்லை.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை என்னை போனில் அழைத்தார். வீட்டுக்கு வருமாறு சொன்னார். நானும் உடனே அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றேன். என்னை பார்த்தவுடன் கிளம்பலாம். புறப்படுங்க என்று சந்தன மர கடத்தல் வீரப்பனை காட்டுக்குள் சென்று பார்க்க தயாராகி விட்டார்.

அப்போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்தார். அவரை காப்பாற்றுவதற்காக தான் ரஜினியே காட்டுக்குள் சென்று வீரப்பனை நேரில் சந்தித்து பேச தயாராகி விட்டார். என்னுடன் வர தயாராகி விட்டார். அப்போது எனக்கு கருணாநிதியிடம் இருந்து போன் வந்தது. என்ன ரஜினி வீட்டுல இருக்கறீங்களா என்றார். ஆமாம் ஐயா என்றேன்.

- Advertisement -

என்ன அங்க கிளம்பணும்ன்னு சொல்றாரா? என்று கேட்டார். பிறகு எப்படியாவது சமாளிங்க என்று சொல்லி விட்டு கருணாநிதி போனை வைத்து விட்டார். ஏற்கனவே ஒரு சூப்பர் ஸ்டார் வீரப்பன் வசம் சிக்கியிருக்கிறார். ரஜினியை நான் அழைத்து சென்றால் 2 சூப்பர் ஸ்டார் ஆகி விடுவார்கள். என்னையும் அவர் ரசிகர்கள் பிச்சி எடுத்து விடுவார்கள்.

அப்புறம் எப்படியோ அதை இதை சொல்லி சமாளித்து நாளைக்கு காலையில் நாம் போகிறோம் என்று சொல்லிவிட்டு ஒருவழியாக தப்பித்து வந்துவிட்டேன். இதில் ரஜினிக்கு என்மீது வருத்தம்தான் என்று கூறியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரை காப்பாற்ற வீரப்பனிடம் நேரில் பேச்சு வார்த்தை நடத்த ரஜினியே துணிச்சலாக முன்வந்திருக்கிறார். ஆனால் அன்றைய முதல்வர் கருணாநிதி ரஜினி மீதான அன்பு அக்கறை காரணமாக அவரை போக விடாமல் தடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்