- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்ஜே சூர்யா இயக்கி நடித்து வரும் கில்லர் படப்பிடிப்பில் நடந்த விபத்து - தொடரும் அசம்பாவிதங்கள்,...

எஸ்ஜே சூர்யா இயக்கி நடித்து வரும் கில்லர் படப்பிடிப்பில் நடந்த விபத்து – தொடரும் அசம்பாவிதங்கள், அந்த முடிவுக்கு வந்தாரா நடிப்பு அரக்கன்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. நடிகர் அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த வாலி என்ற படம் மூலம் அவர் இயக்குனராக பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து குஷி அன்பே ஆருயிரே நியூ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கினார் நியூ படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்தார்.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் இடையிடையே ஒரு சில படங்களையும் இயக்கி வந்தார். இசை என்ற படத்தில் நடித்த பிறகு எஸ்ஜே சூர்யா படம் இயக்கி நடிப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தினார்.

- Advertisement -

மாநாடு மார்க் ஆண்டனி ராயன் ஸ்பைடர் கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த எஸ் ஜே சூர்யா தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கில்லர் என்ற படத்தை எஸ்ஜே சூர்யா அவரே இயக்கி நடித்து வருகிறார். அப்போதும் கால்ஷீட் பிஸி பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அந்த படப்பிடிப்பு இழுபறியாக இழுத்துக் கொண்டே போகிறது.

கிடைக்கும் போதெல்லாம் தனது கில்லர் படப்பிடிப்பை இடையிடையே எஸ்.ஜே சூர்யா நடத்தி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் நடந்த போது சண்டை காட்சியில் விபத்து நடந்தது. அதில் எஸ்ஜே சூர்யாவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 15 நாட்கள் அவர் டாக்டர் அட்வைஸ்படி முழு ஓய்வில் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று காலை சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் கில்லர் படத்தின் சூட்டிங் நடந்தது. அப்போது சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் பாம் பிளாஸ்ட் நடப்பது போன்று காட்சி எடுத்தனர். அப்போது சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் மதன் என்ற ஊழியர் உயிரிழந்தார். அங்கு பணியில் இருந்த 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இது படக்குழுவினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

கில்லர் ஆக்சன் படம் என்பதால் இப்படிப்பட்ட விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இது 2வது மோசமான விபத்தாகும். படத்தின் தலைப்பும் சென்டிமென்ட் ஆக நெகட்டிவ் ஆக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த விபத்து உயிர் பலியால் கில்லர் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் மீண்டும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு எஸ்ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் படத்துக்கு அடுத்தடுத்து பிரச்னைகள் வருவதால் எஸ்.ஏ.சூர்யா இனி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமா என்றும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்