- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 4 எம்எல்ஏக்கள் எதுக்காக ராஜினாமா செஞ்சாங்க? ஏன் அவர்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை? -...

அந்த 4 எம்எல்ஏக்கள் எதுக்காக ராஜினாமா செஞ்சாங்க? ஏன் அவர்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை? – இயக்குனர் அமீர் ஆவேசம்!

- Advertisement -

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் சென்று இணைந்து விட்டனர். அதனால் அந்த தொகுதிகள் எம்எல்ஏக்கள் இன்றி காணப்படுகிறது. அந்த தொகுதி மக்களும் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர் கூறியதாவது, தேர்தல் நடந்து முடிந்து 21 நாட்கள் தான் ஆகிறது. 21 நாட்களில் 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வெளியே செல்கின்றனர். இவங்க எல்லாம் யார்? இவங்களை எல்லாம் எப்படி மக்கள் பிரதிநிதியா நீங்கள் தேர்ந்தெடுத்தீங்க?

- Advertisement -

இவங்க எல்லாம் நமது சமூகத்தில் அழிக்கப்பட வேண்டிய புல்லுருவிகள் மாதிரி தான் இருக்காங்க. என்ன காரணத்துக்காக ராஜினாமா செஞ்சாங்க? மேகதாது அணை கட்டுவதற்காக தங்களது பதவியை ராஜினாமா செஞ்சாங்களா? இல்லே முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரலேன்னு அதுக்காக ராஜினாமா செஞ்சாங்களா?

ஒன்றிய அரசு கொடுத்த சட்ட திட்டங்களை தமிழ்நாட்டில் ரொம்ப இம்ப்ளுயன்ஸ் செய்றாங்கன்னு அதுக்காக ராஜினாமா செஞ்சாங்களா? என்ன காரணத்துக்காக 4 பேர் ராஜினாமா செஞ்சாங்க. யாராவது கேட்கணும் இல்லே. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை இல்லையா?

- Advertisement -

ஊடகங்கள் இதுகுறித்து கேட்க மறந்தது ஏன்? ஊடகங்கள் இதுகுறித்து பேச மறுத்தது ஏன்? உண்மையை சொல்லணும்னா ஆண்ட கட்சியாக இருக்கட்டும், வேறு யாராவது இருக்கட்டும். அந்த 4 பேர் மீதும் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். நீங்க உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள்.

நான் என் வழக்கறிஞர் கிட்ட பேசிட்டு இருக்கிறேன். நாம ஒரு வழக்கு போட்டு இந்த 4 பேரை கேட்டால் என்ன? தேர்தல் ஆணையம் எல்லோரையும் ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறது. ஒருவர் காலையில் இருந்து அடிக்கிற வெயிலில் போய் சாயந்திரம் வரை காத்திருந்து ஓட்டு போட்டுட்டு வந்தால் இவ்வளவு பெரிய அலையில் திமுக தவெக வேண்டாம் அதிமுக வேண்டும் என்று ஓட்டுப் போட்ட மக்களை நீங்க என்னவா நினைக்கறீங்க? என்று இயக்குனர் அமீர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்