- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக நடிக்க சம்மதம் சொல்லாத கென் கருணாஸ், மாதம் ரூ. 50 லட்சம் என சம்பளம்...

ஹீரோவாக நடிக்க சம்மதம் சொல்லாத கென் கருணாஸ், மாதம் ரூ. 50 லட்சம் என சம்பளம் பேசிய விஜய் பட இயக்குனர் – வாட் ப்ரோ வெரி ராங்க் ப்ரோ என கலாய்த்த ரசிகர்கள்!

- Advertisement -

காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ். இயக்குனர் வெற்றிமாறனிடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு அவரது இயக்கத்தில் அசுரன் விடுதலை 2 படங்களிலும் முக்கிய கேரக்டரில் கென் கருணாஸ் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாகவும் நெடுஞ்சாலை உள்ளிட்ட சில படங்களில் கென் கருணாஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில் கென் கருணாஸ் ஹீரோவாக நடித்து இயக்கிய முதல் படம் யூத். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாக பெரிய வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் வசூலையும் குவித்தது. முதல் படத்திலேயே ஹீரோவாக இயக்குனராக கென் கருணாஸ் தன் வெற்றி முத்திரையை பதித்து விட்டார் என கோலிவுட் அவரை பாராட்டியது.

- Advertisement -

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இயக்குனர் வெங்கட்பிரபு ஆயத்தமாக இருந்த நிலையில் அந்த படம் டிராப் ஆகி விட்டது. நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்க வாய்ப்பின்றி வெங்கட்பிரபு மிகவும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் கென் கருணாஸை நேரில் சந்தித்து நாம் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று இயக்குனர் வெங்கட்பிரபு பேசியிருக்கிறார். ஆனால் அவர் எஸ் அல்லது நோ எதுவும் சொல்லாமல் சரி சரி பார்க்கலாம் என்பது போல் மழுப்பியதாக கூறப்படுகிறது. தன்னை விட சீனியர் நடிகர் இயக்குனர் என்ற முறையில் வெங்கட்பிரபுவிடம் கென் கருணாஸ் மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

- Advertisement -

ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளரிடம் கென் கருணாஸ் குறித்து பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு, இந்த படத்துக்காக மாதம் ரூ. 50 லட்சம் என தனக்கு சம்பளம் வழங்கவும் 6 மாதங்களில் படத்தை முடிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஆனால் ஏற்கனவே சிவகார்த்திகேயன் படத்தை இயக்க வெங்கட்பிரபுவுக்கு ரூ. 4.5 கோடி வரை அந்த நிறுவனம் அட்வான்ஸ் தந்துள்ளது. அந்த படத்துக்கான அட்வான்ஸ் பற்றி இப்போது பேசக்கூடாது. அது சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த படம் டிராப் ஆன நிலையில்தான் கென் கருணாஸ் நடிக்கும் படத்தை இயக்கும் திட்டத்துக்கு வெங்கட்பிரபு வந்துள்ளார். ஏனெனில் இப்போது சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ராஜன் வகையறா படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் ஓகே சொல்லாத நிலையில் தயாரிப்பு நிறுவனத்திடம் வெங்கட்பிரபு சம்பளம் பேசியதாக இந்த தகவலை மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்