- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் அந்த ஒரு ஃபோர்ஷனே வேண்டாம், தூக்கி தூரமாக போட்ட இயக்குனர் நெல்சன்...

ஜெயிலர் 2 படத்தில் அந்த ஒரு ஃபோர்ஷனே வேண்டாம், தூக்கி தூரமாக போட்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – என்ன ப்ரோ இது என்ற குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர் 2. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மோகன்லால் சிவராஜ்குமார் எஸ்ஜே சூர்யா விஜய் சேதுபதி யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

வருகிற செப்டம்பர் 3ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியான நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் பண்டிகை கால படம் என்றாலே வசூல் பெரிய அளவில் இருக்கும்.

- Advertisement -

குறிப்பாக தமிழில் இதுவரை எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலிக்காத நிலையில் ஜெயிலர் 2 அந்த சாதனையை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் ரூ. 600 கோடி வசூலை அள்ளியது என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. அதனால் ஜெயிலர் 2 படம் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் கால்ஷீட் இல்லை என்று கூறியதால் அந்த கேரக்டரில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பார் என்று தகவல் வெளியானது.

- Advertisement -

ஆனால் பவன் கல்யாணும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் சமீபத்தில் உறுதியானது. ஷாருக்கான் பவன் கல்யாண் நடிக்க மறுத்த கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவியது. அவரிடம் இதுகுறித்து பேசப்பட்டதாகவும் இணையத்தில் தகவல் வைரலானது.

ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் பவன் கல்யாண் ஹிருத்திக் ரோஷன் என யாருமே நடிக்கவில்லை. அவர்கள் நடிக்க திட்டமிட்ட அந்த போர்ஷனே படத்தில் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த காட்சி எக்ஸ்ட்ரா இணைப்பு தான் என்றும் அந்த காட்சி இல்லாததால் படத்தின் கதையில் திரைக்கதையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்