- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சிக்கும் நடிகர் சத்யராஜ், தனது பாச தளபதிக்காக தந்தையை மறைமுகமாக...

முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சிக்கும் நடிகர் சத்யராஜ், தனது பாச தளபதிக்காக தந்தையை மறைமுகமாக தாக்கிய சிபிராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாறியவர் சத்யராஜ். பின்பு அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் ஒரு காலகட்டத்துக்கு பிறகு சத்யராஜ் குணச்சித்திர நடிகராக மாறி நடித்து வருகிறார்.

நடிகர் விஜயுடன் சத்யராஜ் தலைவா மெர்சல் நண்பன் உள்ளிட்ட படங்களில் இணைந்தும் நடித்திருக்கிறார். ஆனால் பகுத்தறிவு கொள்கைகள் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட சத்யராஜ் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக பேசி நடிகர் விஜயை கடுமையாக தேர்தல் சமயத்தில் விமர்சித்தார்.

- Advertisement -

இப்போது தமிழக முதல்வராக விஜய் ஆன பிறகும் விஜயை சத்யராஜ் கடுமையாக விமர்சிக்கிறார். முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய நடிகர் சத்யராஜ், கொளத்தூரில் தலைவர் ஸ்டாலினை இப்படி தோற்கடித்து விட்டீர்களே என கண்கலங்கி அழுதபடி பேசினார்.

மேலும் திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், வாயில் நல்லா வருது என்று பேசியிருந்ததை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்தார். ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது? எனக்கும் வாயில் இதை விட நல்லா நல்லா வரும் என்றும் கோபமாக பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலாகியது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகன் நடிகர் சிபிராஜ் துவக்கத்தில் இருந்தே விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். தவெக கட்சி தலைவராக விஜய்க்கும் முதல்வரான பிறகும் விஜய்க்கு அவரது ஆதரவு தொடர்ந்து வருகிறது. அடிக்கடி தனது வலைதள பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

சிபிராஜ் தனது தந்தை சத்யராஜ் முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ள இந்த சூழலில், விஜயின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட சிபிராஜ், இக்னோர் நெகட்டிவிடி என்று பதிவிட்டுள்ளார். அதனால் எதிர்மறைகளை தவிர்த்து விடுங்கள் என்று கூறி தனது தந்தையின் எதிர்மறை கருத்துகளை கண்டுக்காதீங்க என்று விஜய்க்கு சொல்லியிருக்கிறார். மகன் சிபிராஜ் இப்படி அப்பா சத்யராஜூக்கு மறைமுக பதிலடி தந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்