- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய டைரக்‌ஷனில் நாகேஷ் மனோரமா நடிச்ச போது எப்படி நடந்துகிட்டாங்கன்னு தெரியுமா? - பிரபல இயக்குனர்...

என்னுடைய டைரக்‌ஷனில் நாகேஷ் மனோரமா நடிச்ச போது எப்படி நடந்துகிட்டாங்கன்னு தெரியுமா? – பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் வெளியான காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் காமெடி நடிகர் நாகேஷ். பிறகு ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்திருந்தார். சிவாஜிக்கு பிறகு நடிப்பில் என் குருநாதராக நாகேஷை பார்க்கிறேன் என்று பலமுறை உலக நாயகன் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆச்சி மனோரமா. அவரும் ஆரம்பத்தில் காமெடியாக நடித்து பிறகு குணச்சித்திர நடிப்பில் வெளுத்து வாங்கியவர். ஏராளமான படங்களில் அம்மா பாட்டி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியவர்.

- Advertisement -

நாகேஷ் மனோரமா இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். கடைசியாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நாகேஷ் மனோரமா நடித்திருந்தனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் நாகேஷ் மனோரமா குறித்து பேசியிருக்கிறார்.

இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, புலிகேசி படப்பிடிப்பில் மனோரமா ஆச்சிக்கு காலை 7 மணிக்கு ஷாட் என்றால் 6.50 மணிக்கு மேக்கப்புடன் உள்ளே வந்துவிடுவார். நாகேஷ் சார் எல்லாம் அப்போது முதுமையால் ரொம்பவும் தளர்ந்துவிட்டார். வயதானவர் லேட்டா தான் வருவார் என்று நினைத்தால் அவரும் சரியான நேரத்துக்கு ஷெட்டுக்கு வந்து விடுவார்.

- Advertisement -

அந்த கால ஆர்ட்டிஸ்ட் டைமிங் என்பதை அப்படி பின்பற்றினார்கள். அந்த டிசிப்பிளின் சான்ஸே இல்லை. அப்படி வந்து ஒரு மணி நேரம் ஒன்றரை மணி நேரம் வெயிட் செய்திருக்கின்றனர். அப்படி ஒத்துழைப்பு தருவாங்க. நாகேஷ் சார் நடக்கும் போது என் தோள் மீது கை வைத்துக்கொண்டு தான் நடந்தே வருவார்.

படத்தில் நடிக்க வந்துட்டோம். நம்மால் இயக்குனருக்கோ தயாரிப்பாளருக்கோ ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் ஆகி விடக்கூடாது என்பதில் அவர்கள் ரொம்பவும் கவனமாக எச்சரிக்கையாக நடந்துக் கொண்டார்கள். அந்த விஷயத்தில் நாகேஷ் மனோரமா விஎஸ் ராகவன் எல்லாம் ரொம்பவும் தெளிவாக இருந்தார்கள் என்று இயக்குனர் பாண்டிராஜ் இம்சை அரசன் 23ம் புலிகேசி பட அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்