- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களா... நடிகர் காட்டில் அடை மழைதான்...

டிராகனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களா… நடிகர் காட்டில் அடை மழைதான் போங்க…

- Advertisement -

கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய மூன்றே மூன்று திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் சென்று இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதில், லவ் டுடே திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது.

இதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், டிராகன் திரைப்படத்தில் நடித்தார் பிரதீப் ரங்கநாதன். இந்தத் திரைப்படமும் அதிரிபுதிரியான வெற்றியை பெற்று இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெறும் பத்தே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டிரைலர் வெளிவந்த போது பலரும் இதனை கழுவி ஊற்றினார்கள். இளைய சமுதாயத்தை கெடுப்பதற்கென்றே இது போல் திரைப்படத்தை இயக்குகிறார்கள் என்றும் சாடினார்கள். ஒரு பக்கம் இது டான் படத்தைப் போலவே இருப்பதாகவும் ஆருடம் கூறினார்கள்.

ஆனால் இதையெல்லாம் அப்போதே இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மறுத்தார். டான் திரைப்படம் வெளியாகி இரண்டு மூன்று ஆண்டுகள் தான் இருக்கும். பின்னர் ஏன் நாங்கள் அதனை ரீமேக் செய்யப் போகிறோம் என்றும் கேள்வி எழுப்பினார். இப்படியான சூழலில் திரையரங்குகளில் அந்த திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

கல்விதான் பிரதானம் என்பதை, ஹீரோ உணரும் வகையில் இந்த திரைப்படத்தின் கதையை சுவாரசியமாக அமைத்திருந்தார் அஸ்வந்த் மாரிமுத்து. படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிராகன் திரைப்படம் கொடுத்த வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கராவின் உதவியாளரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். குட் பேட் அக்லியை தொடர்ந்து மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு மூன்று கதாநாயகிகளாம். இதில் மமீதா பைஜூ நடிப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதுபோக அனு இமானுவேல், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோரும் படத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்