நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான வரவேற்பு சொற்களில் அடங்காதது. அவரது படம் குறித்த தகவல், படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானால் அடுத்த சில நிமிடங்களில் இணையத்தில் நெருப்பாக பரவி வைரலாகி விடுகிறது. விஜய் படத்தின் டிரெய்லர் வெளியானாலும் பல லட்சம் மில்லியன்களை அது கடந்து விடுகிறது. இணையத்தில் விஜய்க்கும் இருக்கும் வரவேற்பே வேற லெவல்தான்.
கடந்த 21ம் தேதி வியாழன் அன்று மதுரையில் உள்ள பாரபத்தியில் நடிகர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில அரசியல் மாநாடு மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் விஜயின் பெற்றோர் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்ஏ சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் மட்டுமே கலந்துக்கொண்டனர். மற்றபடி அனைவருமே கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பவுன்சர்களும்தான் மேடையில் காணப்பட்டனர்.
மாநாட்டு மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய், முதலில் மேடையில் வைக்கப்பட்டு இருந்த கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு பூக்களை தூவி மரியாதை செய்தார். பிறகு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த நீளமான ரேம்ப்பில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து நடக்க ஆரம்பித்து விட்டார். தொண்டர்கள் அவரை நோக்கி வீசிய கட்சி துண்டுகளை கழுத்தில் போட்டுக்கொண்ட விஜய், தலையிலும் கட்டிக்கொண்டு அசத்தினார்.
ரேம்ப் வாக்கில் விஜய் நடந்த போது, அத்துமீறிய சில ரசிகர்கள் அவரை அருகில் பார்க்கவும் கையை தொடவும் குறுக்கில் ஓடி வந்தனர். அவர்களை விஜய்க்கு பக்கவாட்டில் வந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். அப்போதும் நடிகர் விஜய், ரசிகர்களை பார்த்து கையசைக்கவும், அவர்கள் உற்சாகத்தை பார்த்து அவரும் பெரிய அளவில் சந்தோஷப்பட்டார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் தனது செல்போனில் ரேம்ப் வாக்கில் நின்றபடியே ஒரு செல்பி வீடியோ எடுத்தார். அதில் தனக்கு பின்னால் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஆரவாரத்தை அப்படியே பதிவு செய்திருந்தார். பிறகு மாநாடு முடிந்த பிறகு அந்த செல்பி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டார்.
உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான் உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான் என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோ அவர் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ இதுவரை 100 மில்லியன் லைக்ஸ்களை கடந்திருக்கிறது. இதுவரை யாருடைய பதிவும் 100 மில்லியன் லைக்ஸ் வந்தது இல்லை என்ற நிலையில், விஜயின் செல்பி வீடியோ புதிய சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





