தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துக்கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகி விட்டார். எனினும் சென்னையில் அவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றனர். பெப்ஸி தலைவராக ஆர்கே செல்வமணி இருக்கிறார். இப்போது ரோஜா மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, காவலன் என்ற படத்தில் விஜய் ஹீரோவாக பாடிகார்டாக நடித்திருப்பார். அந்த படத்தில் அசின்தான் கதாநாயகி. அசினுக்கு அம்மாவாக அந்த படத்தில் நான் நடித்தேன். அந்த படப்பிடிப்பு நடந்த போது விஜய் புரடியூசரிடம் பேசியிருக்கிறார்.
அப்போது யார்தான் அசின் அம்மாவாக நடிக்கிறாங்க என்று ஏதேச்சையாக கேட்டிருக்கிறார். அப்போது ரோஜா நடிக்கிறாங்க நாளைக்கு வர்றாங்க என்று சொல்லியிருக்கிறார். அதைக்கேட்ட விஜய், ரோஜா மேடமா அவங்களா? சான்ஸே இல்லை. அவங்க நிச்சயமா நடிக்க மாட்டேங்க என்று சொல்லியிருக்கிறார்.
அவங்க என்கூட ஹீரோயினா நடிச்சவங்க, அவங்க எப்படி ஹீரோயினுக்கு அம்மாவா எனக்கு மாமியாரா நடிப்பாங்க என்று விஜய் சொல்லியிருக்கிறார். காலையில் நான் கரெக்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டேன். என்னை பார்த்ததும் மேடம் இப்படி வாங்க என்று விஜய் தனியே கூட்டீட்டு போயிட்டார்.
என்ன மேடம் இவங்க சொன்னதை நான் நம்பவே இல்லை. நீங்க அம்மா எப்படி மேடம் நடிக்க சம்மதிச்சீங்க என்று விஜய் என்னிடம் ஆச்சரியமாக கேட்டார். அப்போ தான் என்ன நாம எதாவது தப்பு பண்ணிட்டோமா, இவரே இப்படீன்னா ஆடியன்ஸ் என்ன நினைப்பாங்க என்று எனக்கு அப்போது தோன்றியது. எனக்கு அப்பவே ஒரு மாதிரி பீஃல் ஆயிடுச்சு.
அப்புறம் அந்த படத்தோட பிரமோசனுக்கு போய் உட்கார்ந்தேன். அப்போ லைவ் கால்ஸ் வந்துச்சு. அப்பவும் பல பேர் ஏன் அம்மா ரோல் பண்றீங்க? இப்பவும் நீங்க அழகா இருக்கறீங்க என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். எல்லோரும் இப்படியே சொல்றாங்களே அப்படீன்னுதான் நான் அப்புறம் படம் பண்றதையே நிப்பாட்டிட்டேன் என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





