- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்... சூது கவ்வும் இயக்குனரின் ஸ்மார்ட் மூவ்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்....

கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… சூது கவ்வும் இயக்குனரின் ஸ்மார்ட் மூவ்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்….

- Advertisement -

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, அதை வெற்றி படமாக கொடுப்பவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரனில் தொடங்கி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து பலரையும் கவனிக்க வைத்த அவர், தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இடையில் சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன் என அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டிருந்த கார்த்திக்கு, மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. வடசென்னை பகுதிகளில் சுவருக்கு பின்னால் இருக்கும் சாதி அரசியலை துணிச்சலோடு கூறியிருந்த இயக்குனர் பா ரஞ்சித், அதில் கார்த்தியை கதாநாயகனாக்கி ஒவ்வொரு காட்சியையும் அழுத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

உயிரோட்டம் உள்ள திரைக்கதை மற்றும் வடசென்னையின் வாழ்வியலை கண்முன் நிறுத்தியதால் மெட்ராஸ் திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்த படத்திலேயே, கிடா மீசை, வேட்டி சட்டையுடன் கொம்பனாக வந்த அசத்தினார் கார்த்தி. ராமநாதபுரம் மண்ணைக் கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வசூலை வாரி குவித்தது.

கமர்சியல் படங்களுக்கே உண்டான அத்தனை அம்சங்களும் கொம்பன் திரைப்படத்தில் இருந்ததால், ரசிகர்கள் அதனை கொண்டாடினர். மேலும் முந்தைய படமான மெட்ராஸ் திரைப்படத்தில் நகரத்து இளைஞனாக நடித்த கார்த்தி, அடுத்த படத்திலேயே கிராமத்து மண் சார்ந்த கதையை தேர்வு செய்திருப்பதாகவும் பாராட்டினர். இதனை சரியாக தக்க வைத்துக் கொண்ட நடிகர், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் படங்களில் இறங்கி வெற்றி கண்டார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படமும், அவருக்கு மாஸ் நடிகர் அந்தஸ்தை கொடுத்தது. டில்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், ஆக்சன் ஹீரோக்களுக்கே உண்டான அதட்டலான நடிப்பை வெளிப்படுத்த புகழின் உச்சிக்கு சென்றார் கார்த்தி. தொடர்ந்து சுல்தான், விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அவர், தற்போது ஜப்பான் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் பட இயக்குனர் நலன் குமாரசாமியுடன் கார்த்தி இணைய இருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை மையமாக படுத்தி இந்த படம் எடுக்கப்படுவதாகவும், இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது புதிய தகவலாக, கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி சத்யராஜ் என இரு பெரும் நடிகர்கள் எதிரெதிர் கதாபாத்திரங்களின் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்