- Advertisement -
Homeபொழுதுபோக்குகாருக்குள் இருந்த கம்ருதீன் - சாண்ட்ரா இடையே ஏற்பட்ட கடும் மோதல்… திடீரென மயங்கி விழுந்த...

காருக்குள் இருந்த கம்ருதீன் – சாண்ட்ரா இடையே ஏற்பட்ட கடும் மோதல்… திடீரென மயங்கி விழுந்த சாண்ட்ரா மருத்துவமனையில் அட்மிட் – பிக்பாஸ் வீட்டுக்குள் பதட்டம்!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இப்போது நிறைவுக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 13 வாரங்களை இப்போது கடக்க உள்ள நிலையில் 2 வாரங்களில் இறுதிக்கு வர உள்ளது. இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் டிக்கெட் டு பினாலே டாஸ்க்குகள் நடந்து வருகிறது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக பைனலுக்குள் நுழைவார்.

அதனால் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற பிக்பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இப்போதைய நிலவரப்படி சபரிநாதன் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளார். பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடிகள் உருவாகி விடுகின்றன. முதல் சீசனில் ஓவியா – ஆரவ் தொடங்கி இப்போது 9வது சீசனிலும் கம்ருதீன் பார்வதி வரைக்கும் இந்த காதல் விளையாட்டு நீடிக்கிறது.

- Advertisement -

ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை இருந்த காதல் ஜோடிகளை காட்டிலும் கம்ருதீன் பார்வதி விசித்திரமான ஒரு காதல் ஜோடியாக உள்ளனர். இந்த காதல் ஜோடி மிக மோசமாக சண்டையிட்டுக் கொள்வதும், திடீரென அப்படியே மாறி கொஞ்சி குலாவிக் கொள்வதும் என அடிக்கடி நடக்கிறது. இது பிக்பாஸ் பார்வையாளர்களை மட்டுமின்றி வீட்டுக்குள் உள்ள சக போட்டியாளர்களும் இவர்களது நடவடிக்கையை பார்த்து பலத்த குழப்பத்தில் உள்ளனர்.

இதற்கிடையே பார்வதி கம்ருதீன் பயங்கரமாக சண்டையிட்ட போது, பார்வதியை சாண்ட்ரா தான் சமாதானம் செய்தார். அப்போது கம்ருதீன் குறித்து சில கருத்துகளை பார்வதியிடம் சாண்ட்ரா கூறியிருக்கிறார். மீண்டும் கம்ருதீனிடம் சேர்ந்த பார்வதி, சாண்ட்ரா சொன்னதை எல்லாம் கம்ருதீனிடம் போட்டு கொடுத்து விட்டார். இதனால் கோபமடைந்த கம்ருதீன் சாண்ட்ராவை பிஃராடு என திட்டினார். இதனால் கோபமடைந்த சாண்ட்ரா கார்டன் ஏரியாவில் அழுத போது அவரை விக்ரம் மற்றும் அரோரா சாண்ட்ராவை சமாதானம் செய்தனர்.

- Advertisement -

இப்போது டிக்கெட் டு பினாலேவில் கார் டாஸ்க் நடந்து வருகிறது. இந்த டாஸ்க்கில் ஒரே காரில் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். இதில் பார்வதி சாண்ட்ரா கம்ருதீன் அருகருகே அமர்ந்தனர். அப்போது கம்ருதீன் சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்து சண்டையிடுகிறார். கோபமான சான்ட்ரா, உன்னை மாதிரி நான் இங்கே பொறுக்கித்தனமா பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று கம்ருதீனை விமர்சிக்கிறார். பெரிய இவ, மூஞ்சியப் பாரு என்று சாண்ட்ராவை தரக்குறைவாக கம்ருதீன் திட்டி விடுகிறார்.

இந்த சண்டை முற்றிய நிலையில் ஆவேசப்பட்ட சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக் வந்து மயக்கம் போட்டு விழுந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்பு சாண்ட்ரா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் மோதல் உச்சக்கட்டம் அடைந்து வருகிறது. ஆனால் இத்தனை பிரச்னைகளுக்கும் மையமாக இருந்து வருவது பார்வதி தான் என்று பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்