தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் கூல் சுரேஷ். அவ்வப்போது வீடிேயோக்களை வெளியிட்டு ஏதேனும் சமூக கருத்துகளை கூறி வருகிறார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருமுறை கலந்துக்கொண்டார். ஒருமுறை பட விழா நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளர் கழுத்தில் மாலையை போட்டு சர்ச்சையிலும் சிக்கியவர்தான் கூல் சுரேஷ்.
சமீபத்தில் தலைமை செயலகம் சென்ற நடிகர் கூல் சுரேஷ் அமைச்சர்கள் ராஜ்மோகன் உள்ளிட்ட சிலரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது தவெக அமைச்சர்கள் மிகவும் பண்புள்ளவர்கள். என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள் என்று விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையே நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தவெக ஆட்சி மிக விரைவில் கவிழ்ந்துவிடும். 6 மாதங்கள் கூட தாக்குபிடிக்காது என்று சொல்கிறார்களே? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, இது எல்லோரும் சொல்வதுதான். தாங்காது என்று நீங்கள் எதை வெச்சி சொல்றீங்க? இந்த தாங்காது வீங்காது போங்காது ஏங்காது இதெல்லாம் டிஆர் சார் வசனம் மாதிரிதான். புரியுதுங்களா? நீங்க வெயிட் பண்ணி பாருங்க.
இன்னிக்கே கல்யாணமாகி இன்னிக்கே குழந்தை பொறந்து நாளைக்கு அது ஸ்கூலுக்கு போயி டாக்டர் ஆகணும் என்றால் அது நடக்காதுங்க. இன்னிக்கு விதை வெதைச்சா அது செடியா முளைச்சு வளர்ந்து காய் காய்ச்சி பூ பிடிச்சி நிழல் தந்து இப்படி எல்லாமே தரும். இதற்கான முடிவு இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தெரிஞ்சிடும்.
எனக்கு தெரிஞ்சு இப்போது உள்ள ஆட்சி அது நல்லா தான் இருக்கு. காரணம் இப்போ எது பண்ணினாலும் சோஷியல் மீடியாவில் வெளியில் தெரிகிறது. நீங்க இப்படி எல்லாம் கேட்டு வேணும்னே என்னை டென்சன் பண்றீங்கன்னு நெனைக்கிறேன் என்று நடிகர் கூல் சுரேஷ் திடீரென டென்சனாகி ஆவேசமாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





