- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட திருமணம் இப்படித்தான் நடக்கும். அதுவரை காத்திருப்பேன் விஜய் தேவரகொண்டா வெளிப்படை - விவரம் இதோ

என்னோட திருமணம் இப்படித்தான் நடக்கும். அதுவரை காத்திருப்பேன் விஜய் தேவரகொண்டா வெளிப்படை – விவரம் இதோ

- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா டோலிவுட் சினிமாவில் மிகப் பிரபலம் அடைந்த ஒரு ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். அதேவேளையில் தமிழிலும் அவர் “நோட்டா” என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். அதோடு அவரது நடிப்பில் மொழிபெயர்க்கப்பட்ட படங்கள் தமிழில் வரவேற்பினை பெற்று வருகின்றன.

Vijay-Devarakonda-2

அதன் காரணமாக தமிழக ரசிகர்கள் மத்தியிலும் விஜய் தேவரகொண்டா நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பழமொழிகளில் திரைக்கு வர காத்திருக்கிறது.

- Advertisement -

செப்டம்பர் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கான ப்ரோமோஷனில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னையிலும் தங்களது ப்ரோமோசனை நடத்தியுள்ளனர். அந்த வகையில் சென்னை வந்த போது விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டியில் :

Kushi

தனது திருமணம் குறித்த முக்கிய தகவலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விஜய்யின் குஷி பட தலைப்பை எனது படத்திற்கும் வைத்திருப்பது மகிழ்ச்சி. தமிழில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிப்பதில் விருப்பம். அதோடு சமந்தா ஒரு திறமையான நடிகை நான் அவரது தீவிர ரசிகன் அவருடன் ஜோடியாக நடித்ததில் மிக மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் தனது திருமணம் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா கூறுகையில் : கட்டாயம் நான் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன். ஏனெனில் எனக்கு மனைவியாக வரப்போகிறவரிடம் நான் நன்றாக பழகி அவர்களது குணாதிசயங்களை அறிந்து கொண்டால் தான் வாழ்க்கையில் அது சாத்தியமாகும். பெண்கள் மீது அதிகாரத்தை செலுத்தக் கூடாது நான் அவர்களை மதிக்கிறேன் அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுத்து அவருடன் வாழ விரும்புகிறேன் என விஜய் தேவரகொண்டா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்