தமிழ் சினிமாவில் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் ஜீவா நடித்த கவலை வேண்டாம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பாடம் துருவங்கள் பதினாறு மூக்குத்தி அம்மன் பசங்க உள்ளிட்ட பல படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டஸ்டன்ட் ஆக பங்கேற்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கிக் கொண்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் குறித்து ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் ரிலாக்ஸாக நடந்து வரும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி அதிகளவில் ஷேர் செய்யப்பட்டது.
அந்த வீடியோவுக்கு ஒரு நபர், பொது இடத்தில் இப்படி அரைகுறை ஆடையில் போட்டோ சூட் எடுத்தால் முதல்வர் விஜய் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று அந்த நபர் குற்றம் சாட்டியது போலவும், அதற்கு யாஷிகா ஆனந்த் நடிகை திரிஷா பெயரை குறிப்பிட்டு பதில் அளித்தது போலவும் ஒரு ஸ்கிரீன் ஷாட் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சர்ச்சைக்கு நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது விளக்கம் தந்து இருக்கிறார். யாஷிகா ஆனந்த் அந்த பதிவில் கூறியிருப்பதாவது, தற்போது பரப்பப்பட்டு வரும் ஒரு விஷயம் முற்றிலும் உண்மை இல்லாதது. இப்படியெல்லாம் என்னை கேவலமாக சித்தரித்து சிலர் பிரபலமடைய பார்க்கிறார்கள்.
நான் ஒரு தவறான பொருளை பயன்படுத்துவதாக இதற்கு முன்பு புகைப்படம் ஒன்று ஒன்றை ஷேர் செய்து அவதூறு பரப்பினார்கள். அதிகமான லைக்குகளை வாங்க நடத்தும் இது போன்ற மோசமான செயலை யாரும் நம்பாதீர்கள் என்று யாஷிகா ஆனந்த் அந்த பதிவில் கூறியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் விவகாரத்தில் முதல்வர் விஜய் திரிஷா பெயர்களை இழுத்து விட்டு விஷமம் செய்தது யார் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.





