- Advertisement -
Homeபொழுதுபோக்குராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப் போறதும் இல்லே, திருச்சி கிழக்குல நிற்க போறதும் இல்லே, எதுக்கு...

ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப் போறதும் இல்லே, திருச்சி கிழக்குல நிற்க போறதும் இல்லே, எதுக்கு இந்த வீண் பில்டப்? – கோபப்பட்ட பிரபலம்!

- Advertisement -

கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்த தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இப்போது மிக விரைவில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக தகவல் பரவியது. இதுகுறித்து 2 தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் வருகிற 11ம் தேதி ( நாளை) காலை 9.30 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ராகவா லாரன்ஸ் உண்மையில் மனிதநேயம் உள்ள மனிதர். லாரன்ஸ் எப்படிப்பட்டவர் அப்படீன்னு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கோடி கோடியா பணம் சம்பாதித்து சொத்து சேர்க்கிற நடிகர்கள் இருக்கும்போது தன்னால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு பண்ணிக்கிட்டே இருக்கிற ஒரு நல்ல மனுஷன்தான் லாரன்ஸ்.

ஆனால் திருச்சி கிழக்குல நான் நிற்கலே, இல்ல நிற்கிறேன். இதுல ஏதாவது ஒண்ணை அவர் சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு 11ம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியிடுறேன்னு சொன்னா மக்கள் குழப்பம் அடைய மாட்டாங்களா? இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கணும். அதை விட்டுட்டு இன்னும் 2 நாள் இழுத்துட்டு போறது ஏன்?

- Advertisement -

மக்கள் நம்மள பத்தி பேசிட்டே இருக்கணும்ன்னு லாரன்ஸ் நினைக்கிறார் போல. என்னைக் கேட்டால் விஜய் கட்சியில் அவர் இணைய போறதுமில்லை. தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் நிற்க போறதும் இல்லை. ஆனால் 11ம் தேதி என்ன அறிவிக்கப் போகிறார் என்று நானும் உங்கள மாதிரியே காத்திருக்கேன்.

அரசியலுக்கு லாரன்ஸ் வருவது தவறில்லை. ஏழை மக்களுக்கு நல்லது செய்யணும். அனாதைகளை காப்பாற்ற வேண்டும். நோயாளிகளை குணப்படுத்தனும் என்று உண்மையா நினைக்கிற மனிதர் லாரன்ஸ். அவர் அரசியலுக்கு வருவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் தனியாக கட்சி ஆரம்பிப்பதற்கு பதிலாக மக்களுக்கு பயன் தரக்கூடிய சரியான பாதையை தேர்ந்தெடுத்தால் நல்லது என்று பத்திரிக்கையாளர் அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்