- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவுக்கு ஆன்மாவை தந்தவர் இயக்குனர் பாரதிராஜா - மோகன்லால் டி ராஜேந்தர் உள்ளிட்ட பிரபல...

தமிழ் சினிமாவுக்கு ஆன்மாவை தந்தவர் இயக்குனர் பாரதிராஜா – மோகன்லால் டி ராஜேந்தர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் புகழாரம்!

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா மறைவு குறித்து இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறுகையில், தமிழ் திரையுலகின் சூரியனாக இருந்தவர் பாரதிராஜா. அவரது மறைவு பெரிய இழப்பு என்று கூறியிருக்கிறார். நடிகர் ராமராஜன் கூறுகையில் எக்காலமும் போற்றும் உயிரோடு ஒன்றிய திரைக்காவியம் படைத்த எங்கள் இயக்குனர் இமயத்துக்கு கண்ணீர் அஞ்சலி என்று கூறியிருக்கிறார்.

நடிகர் மோகன்லால் வெளியிட்ட பதிவில், மண்ணில் கவிதையையும் மௌனத்தில் உண்மையையும் ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மாவையும் கண்டறிந்த ஒரு இயக்குனர் பாரதிராஜா. தொடரும் படத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தது நான் என்றென்றும் போற்றும் ஒரு பெருமையாகும். அமைதியில் துயில் கொள்ளுங்கள் ஐயா. உங்கள் கலைப் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அதே வேளையில் உங்களின் இல்லாமை ஆழமாக உணரப்படும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடிகை ரேவதி கூறுகையில், நான் நடிகையாக இருப்பதற்கு காரணமானவர் இயக்குனர் பாரதிராஜா என்று கூறியிருக்கிறார். நடிகர் சிபிராஜ் கூறுகையில், உங்கள் திரைப்படங்கள் திரைப்பட உருவாக்க கலைக்கான ஒரு சிறந்த பாடப்புத்தமாக திகழ்ந்தன. கிராமப்புற தமிழகத்தின் ஆன்மாவை திரையில் கொண்டு வந்த நீங்கள் தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றும் மாற்றி அமைத்தீர்கள். திரைத்துறைக்கு இது ஒரு பெயரில் இழப்பு ஐயா என்று நடிகர் சிபிராஜ் கூறியிருக்கிறார்.

நடிகர் சாந்தணு கூறுகையில், தமிழ் சினிமாவுக்கு ஆன்மாவை அளித்த ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆனால் அவரது தடம் வரும் தலைமுறைகளுக்கு நிலைத்திருக்கும் என்று சாந்தணு கூறியிருக்கிறார். பாரதிராஜா மறைவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் தனது பதிவில், தமிழ் திரை உலகத்தின் தலையாய மரியாதையை வென்றவர் பாரதிராஜா. அவரது மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகின்றது. நெஞ்சம் தாங்கவில்லை. எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை. அவரை இழந்து வாழக்கூடிய தமிழ் திரையுலக ரசிகர் பெருமக்களுக்கும் அவரை இழந்து வாழக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி. ராஜேந்தர் கூறியிருக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன், நம் இழப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார். நடிகர் யோகி பாபு வெளியிட்ட பதிவில், பாரதிராஜா மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தனித்துவமான கதை சொல்லாலும் மண்ணின் மணம் வீசும் படைப்புகளாலும் தமிழ் சினிமாவை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றவர். அவர் படைத்த கதைகளும் கதாபாத்திரங்களும் திரைப்படங்களும் என்றும் காலத்தால் அழியாதவை என்று நடிகர் யோகி பாபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்