- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அரசியலுக்கு வரட்டுமா, வேண்டாமா? தமிழக மக்களிடம் கருத்து கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் -...

நான் அரசியலுக்கு வரட்டுமா, வேண்டாமா? தமிழக மக்களிடம் கருத்து கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் – நாங்க வேண்டாம்னா வராமல் இருந்துடுவீங்களா என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த சில நாட்களாக நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப் போகிறார் என்கிற தகவல் பரவி நிலையில், இன்று காலை அதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. நான் தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நானும் வருகிறேன் என்றேன்.

ஆனால் என் அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. அது ஒரு சாக்கடை அரசியலுக்கு போகக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிக்கிறார்கள். அங்கு ஜாதி மதம் எல்லாமே இருக்கிறது. அந்த சாக்கடைக்குள் நீ போகாதே என்றார். இந்த உலகத்தில் அம்மா சொல்லை மீறி எதையும் செய்யலாம். ஆனால் அதன்பிறகு நான் உருப்பட மாட்டேன் என்று எனக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

அதே நேரத்தில் கொரோனா வந்தது. அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். அரசியலுக்கு வர முடியாதது குறித்தும் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அதன் பிறகு நண்பர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்றார். ரஜினிகாந்த் எந்தளவுக்கு எனக்கு நெருக்கமோ அதே அளவுக்கு விஜயும் எனக்கு நெருக்கமானவர்.

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். அம்மாவிடம் கேட்டேன். அப்போதும் அம்மா சம்மதிக்கவில்லை. நம் ஜாதகத்தில் அரசியல் என்று எழுதப்படவில்லை போலிருக்கிறது என்று நினைத்தேன். மீண்டும் 2 நாட்களுக்கு பிறகு அம்மாவிடம் பேசினேன். அப்போதும் அதையே சொன்னார். ஆனால் தேர்தல் வந்தது முடிவுகள் வந்த போது எல்லாமே மாறிவிட்டது. விஜய் எல்லாவற்றையும் மாற்றி விட்டார்.

- Advertisement -

அப்போது அம்மாவிடம், இப்போது நான் அரசியலுக்கு போகலாமா என்று கேட்டேன். அதற்கு அம்மா, போ கண்ணா என்று ஒப்புதல் சொல்லி விட்டார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது தாய்க்கு நிகரான என் ரசிகர்களிடம் கேட்கிறேன். நான் அரசியலுக்காக வரலாமா, அரசியலுக்கு வருவதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? நீங்களே சொல்லுங்கள். வர வேண்டாம் என்று சொன்னால் வரமாட்டேன். வா என்று சொன்னால் வருகிறேன்.

உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுடைய ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துக்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனது சுயநலமற்ற சமூக சேவையை தொடர்ந்து செய்வேன்.உங்களுடைய ஆசியுடன் இந்த அரசியல் பயணத்தை எப்போது யாருடன் தொடங்கப் போகிறேன் என்பதையும் விரைவில் அறிவிப்பேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். நாங்க வேண்டாம்ன்னு சொன்னால் வராமல் இருந்துடுவீங்களா என ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்