இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைத்தது.
நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் இறுதியில் இந்தியன் தாத்தா உயிரோடு இருப்பது போன்ற காட்சிகளோடு அந்த படத்தை நிறைவு செய்திருந்தார் ஷங்கர். அதனை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் சங்கர்.
இந்த படத்தை பொறுத்தவரை கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காலமான நடிகர் விவேக், எஸ் ஜே சூர்யா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பல தொழில்நுட்பங்களை இயக்குனர் சங்கர் பயன்படுத்துவார் என்று தெரிகிறது.
தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகவும், ஸ்பெஷல் எபெக்ஸ்களுக்காகவும் அமெரிக்கா சென்று உள்ள சங்கர் அங்கிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் தான் லோலா விசுவல் நிறுவனத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். இந்த லோலா விசுவல் நிறுவனம் என்பது ஒருவரின் வயதை குறைத்து காட்டக்கூடிய தொழில்நுட்பத்தில் படங்களை உருவாக்கும் ஒரு நிறுவனமாகும்.
அப்படி பார்த்தோமானால் கமல்ஹாசன் தற்போது வயதாகி உள்ளதால் அவருடைய இளமையான தோற்றத்தை இந்த தொழில்நுட்பம் மூலம் ஷங்கர் காட்டவிருக்கிறாரோ என்று என்ன தோன்றுகிறது. ஒருவேளை இந்தியன் பாகம் ஒன்றில் இருந்த இளமையான கமல்ஹாசன் இதிலும் இடம் பெறுவாரோ என்று தோன்றுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் கமலின் வயதை குறைத்து காட்டலாமா என்று யோசித்து பின்னர் இதன் செலவு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த முடிவை கைவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே தொழில்நுட்பத்தை சங்கர் கையில் எடுத்துள்ளார். சங்கர் படத்திற்கு பட்ஜெட்டிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் அவர் நிச்சயம் இதை சிறப்பான முறையில் பயன்படுத்துவார் என்றே தோன்றுகிறது.





