- Advertisement -
Homeபொழுதுபோக்குவைரமுத்து ரொம்ப திமிரு பிடிச்ச ஆளு, முதல் சந்திப்பிலேயே அவரை பத்தி இளையராஜா கரெக்டா சொல்லிட்டார்...

வைரமுத்து ரொம்ப திமிரு பிடிச்ச ஆளு, முதல் சந்திப்பிலேயே அவரை பத்தி இளையராஜா கரெக்டா சொல்லிட்டார் – ஓபனாக பேசிய இயக்குனர் பாரதிராஜா!

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது, சிலோனுக்கு ( இலங்கை) லொக்கேஷன் பார்க்க சென்றிருந்தேன். நிறம் மாறாத பூக்கள் படத்தை சிலோனில் எடுக்க வேண்டும் என்ற பிளான் அப்போது எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு அப்புறம் ஊட்டியில்தான் அந்த படத்தை எடுத்தேன்.

அந்த ஷூட்டிங்குக்கு கிளம்பிய போது உபால்டு என்கிற ஒரு பெரிய ஓவியர் என்னை வந்து சந்தித்தார். அப்போது ஒல்லியான கருப்பான ஒரு ஆளை கூட்டி வந்தார். இவர் கவிஞர். பாட்டெல்லாம் எழுதுவார் என்று என்னிடம் அறிமுகப்படுத்தினார். அந்த ஆள் என்னிடம் அவன் எழுதிய ஒரு புத்தகம் கொடுத்தான். அதுதான் திருத்தி எழுதிய தீர்ப்புகள்.

- Advertisement -

அந்த புத்தகத்தை என்னிடம் தரும்போது அவன் சொன்னான். முடிந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றான். திமிரு. ஒரு கவிஞன் சான்ஸ் கேட்டு வரும்போது இவ்வளவு திமிரா? அப்படீன்னு யோசித்தேன். அதுதான் வித்தை கர்வம். நான் விமானத்தில் போகும் போது அந்த புத்தகத்தை புரட்டினேன்.

மேற்குத் தொடர்ச்சி மலை மஞ்சள் ஆறு என்றெல்லாம் அதில் வருகிறது. யார் இவன் எந்த ஊர்காரன்னு தெரியலையே என்று யோசிக்கிறேன். அப்புறம் கம்போஸிங்கில் உட்காருகிறோம். அப்போதுதான் இளையராஜா யோவ் யாரையாவது புதுசா போடுய்யா என்று சொன்னான். அப்போது நான் ஒரு கவிஞன் சொல்கிறேன் என்றேன்.

- Advertisement -

யோவ் எவனையாவது கூட்டீட்டு வந்து என் கழுத்தை அறுக்காதே என்று இளையராஜா சலிப்பாக சொன்னான். பிறகு போனில் தகவல் சொல்லி அவரை அங்கு வரவழைத்தேன். அவரிடம் சந்தத்துக்கு பாட்டு எழுதணும் என்று இளையராஜா ஒரு சந்தம் சொன்னான். எழுதுகிறேன் என்று ஒரு பேப்பரை வாங்கீட்டு போனான். அடுத்த நிமிஷமே ஒரு பாட்டை எழுதீட்டு வந்து இளையராஜாவிடம் தந்தான்.

பொன் மாலைப் பொழுது, இது ஒரு பொன்மாலை பொழுதுன்னு எழுதியிருந்தான். சந்தத்துல அது அப்படியே உட்காருது. கொஞ்சம் வெளியே இருங்கன்னு இளையராஜா அவனை அனுப்பிட்டு, யோவ் பயங்கரமான கவிஞன்யா அவன். நான்கூட என்னமோன்னு நினைச்சேன். இவன் பெரிய யானை எல்லாம் கவிழ்த்திடுவான் என்றான். அவன் சொன்ன வார்த்தை இன்னிக்கும் பலிக்குது என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா கவிஞர் வைரமுத்து குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்