நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி 2 ஆண்டுகள் 3 மாதங்களில் ஆட்சிக்கு வந்துவிட்டார். அவரது தவெக கட்சி சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே 108 இடங்களில் வென்று கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராகி விட்டார். அவர் முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்து விட்டது.
கட்சித் தலைவராக விஜய் இருந்த போதே அவர் மீது எழுந்த முக்கிய விமர்சனங்களில் ஒன்று, அவர் பங்கேற்ற கட்சி கூட்டங்களில் மேடைகளில் யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே பேசுகிறார் என்பதுதான். சில நேரங்களில் எழுதிய காகிதங்களை பார்த்து அப்படியே வாசித்து விடுகிறார் என்றும் விமர்சனம் செய்தனர்.
அதே போல் விஜய் தமிழக முதல்வரான பிற்கும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், விஜய் குறித்த கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்தும் கடுமையாக பேசினார். எம்எல்ஏக்கள் ஆதரவில் குதிரை பேரம் நடந்ததாக குற்றம் சாட்டினார்.
ஆனால் முதல்வர் விஜய் அப்போது எந்த பதிலுமே சொல்லாமல் மவுனமாக இருந்து விட்டார். பிறகு அவர் பேசிய போது உதயநிதி ஸ்டாலின் பிரமேலதா விஜயகாந்த் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தருவார் என எதிர்பார்த்த நிலையில் எதுவுமே அதுபற்றி பேசாமல் கமுக்கமாக அமர்ந்துவிட்டார் என்று விமர்சித்தனர்.
அதன்பிறகு வீட்டுக்கு சென்ற விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் மிக நீண்ட ஒரு பதிவை செய்து திமுக குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். சட்டசபையில் பேசாமல் போய்விட்டு வீட்டுக்குச் சென்று பதில் தருவதுதான் விஜயின் ஸ்டைலா? என்றும் பலர் கிண்டல் செய்தனர். இந்நிலையில் வருகிற 18ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் கூடுகிறது.
திருச்சியில் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், வருகிற சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் விஜய்க்கு சரியான பதிலடி தர திமுக தலைமை தயாராகி வருகிறது. அப்போதும் பதில் சொல்லாமல் எக்ஸ் பதிவில் அறிக்கை வெளியிட்டால் தவறாகி விடும் என்பதால், கடந்த சில வாரங்களாக முதல்வர் விஜய், வீட்டிலேயே கடுமையான ஹோம் ஒர்க் செய்து வருவதாகவும் சட்டசபையில் யார் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்வது போல பல தகவல்களை அதிகாரிகள் உதவியுடன் பிரிப்பேர் செய்து வருவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.





