- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது, மிஸ் செய்தது வருத்தமாக உள்ளது - லப்பர்...

அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது, மிஸ் செய்தது வருத்தமாக உள்ளது – லப்பர் பந்து சுவாசிகா ஓபன்டாக்!

- Advertisement -

நல்ல படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் போதுதான் நடிகர்களின் இமேஜ் மற்றும் மார்க்கெட் சரசர என உயர்ந்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிளாஸ்ட் படம் நடிகர் அர்ஜூனுக்கு மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த அபிராமி ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் நடித்த வானவில் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. நீண்ட நாட்களுக்கு பிறகு பிளாஸ்ட் படத்தில் அர்ஜூனுடன் மீண்டும் இணைந்து அவரது மனைவியாக அபிராமி நடித்திருந்தார். இந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தும் மிஸ் செய்து விட்டதாக லப்பர் பந்து நடிகை சுவாசிகா வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சுவாசிகா. ஏற்கனவே தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷின் மனைவியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து மாமன் படத்தில் சூரியின் அக்காவாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த கருப்பு படத்திலும் வக்கீல் கேரக்டரில் அவர் காணப்பட்டார். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள நூறு சாமி படத்திலும் சுவாசிகா முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாசிகா கூறியதாவது, சமீபத்தில் வெளியான பிளாஸ்ட் படத்தில் நடிகை அபிராமி நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்குதான் வந்தது. ஆனால் அந்த சமயத்தில் கருப்பு மற்றும் நூறு சாமி படங்களின் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன்.

அதனால் பிளாஸ்ட் படத்திற்கு தேவையான கால்சீட்டை என்னால் தர முடியவில்லை. அதனால் பிளாஸ்ட் படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு தவறிப் போய் விட்டது. பிளாஸ்ட் படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு சற்று வருத்தமாக உள்ளது என்று நடிகை சுவாசிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்