இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா திரிஷா அனகா மாயா ரவி இந்திரன்ஸ் ஆர்ஜே பாலாஜி சுவாசிகா நட்டி நடராஜ் ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்த படம் கருப்பு சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் இதுவரை 340 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ளது.
கருப்பு படத்தின் இரண்டாம் பாதியை விட முதல் பாதிதான் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். கருப்பு படத்தின் இடைவேளை வரை அவரது மையப்படுத்திய கதைதான் அந்த படத்துக்கு மிகப்பெரிய ஒரு கவனத்தை ஏற்படுத்தி தந்தது.
கதைப்படி இந்திரன்ஸ் தந்தையாகவும் அவரதுது மகளாக வினு என்ற கேரக்டரில் அனகா மாயா ரவியும் நடித்திருந்தனர். தனது மகள் வினுவின் அறுவை சிகிச்சைக்காக தான் அவரை அழைத்துக் கொண்டு அவரது தந்தை இந்திரன்ஸ் சென்னைக்கு ரயிலில் வந்திருப்பார். அப்போது அவர் கொண்டு வந்த 60 சவரன் நகைகள் திருடு போய்விடும்.
அந்த நகைகளை மீட்க அவர் கோர்ட்டில் போராடுவதுதான் படத்தின் மையக் கதை. ஆனால் படத்தின் பாதியிலேயே வினு கதாபாத்திரம் இறந்துவிடுவது போல் கதை நகரும். தனது மகள் இறந்து விட்டாள் என்று இந்திரன்ஸ் அழுது புலம்பி கருப்பசாமி முன்பு வரமிளகாய் அரைப்பார். அதன்பிறகு தான் கருப்பு சாமியாக சூர்யா படத்தில் வருவார்.
ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் ஒரு ஓட்டலில் வினு, அவரது அப்பாவுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போல் ஒரு காட்சி வரும். அதை திரிஷா பார்ப்பது போல் காட்டப்படும். அதனால் கருப்பு படத்தில் வினு கேரக்டர் இறந்தாரா, இல்லையா என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அல்லது திரிஷாவின் விருப்பமாக கற்பனையாக அந்த காட்சி வருகிறதா என்றும் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து அனகா மாயா ரவி ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். கருப்பு படத்தில் நான் இறந்தேனா இருக்கிறேனா என்று எனக்கே தெரியாது. படத்தின் நான் இறந்துவிட்டேனா, உயிருடன் இருக்கிறேனா என ரைட்டர் அஸ்வினிடம் கேட்டேன். அதை ரசிகர்கள்தான் யோசிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அவர்கள் என்னிடம் கூட அதைச் சொல்லவில்லை என்று நடிகை அனகா மாயா ரவி ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





