தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்ற அவரது தவெக கட்சி ஆட்சியமைத்த நிலையில் தமிழக முதல்வராக விஜய் ஒரு மாதத்தை நிறைவும் செய்து விட்டார்.
இதற்கிடையே நடிகர் விஜய் மனைவி சங்கீதா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மே 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜூன் 15ம் தேதி இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி நாளை 15ம் தேதி விஜய் சங்கீதா வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணைக்கு விஜய் மற்றும் சங்கீதா இருவருமே நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வராக உள்ள விஜய் கோர்ட்டுக்கு நேரில் வருவாரா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக விஜய் சங்கீதா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய் மனைவி சங்கீதா அதாவது மருமகள் சங்கீதாவிடம் பேசி சமாதானம் செய்ததாகவும் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, சங்கீதா விஜயுடன் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் விஜய் நடிகை திரிஷாவுடன் நெருக்கமான தொடர்பில் திருமணத்தை மீறிய உறவில் நீண்ட காலமாக இருப்பதால்தான் விஜயை பிரியும் முடிவுக்கே வந்ததாக சங்கீதா, தனது விவாகரத்து வழக்கு மனுவில் கூறியிருக்கிறார். விஜய் திரிஷாவை பிரிவதாக கூறிவிட்டு மீண்டும் உறவை தொடர்ந்ததால் தான் இந்த பிரிவு முடிவுக்கே வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அந்த வகையில் முதல்வர் விஜய், நடிகை திரிஷாவுடன் தனது உறவை முறித்துக்கொண்டால் மட்டுமே சங்கீதா விஜயுடன் மீண்டும் இணைந்து வாழ வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று டயலாக் பேசும் விஜய் அதற்கு சம்மதிப்பாரா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. நாளை செங்கல்பட்டு கோர்ட்டில் இவர்களது வழக்கு விசாரணைக்கு வரும்போது இது எந்தளவுக்கு உண்மை என்பது வெளிச்சத்துக்கு வரும்.





