- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ் தந்த படக்குழு… ஆனா கடைசியில் இப்படி சொதப்பிடுச்சே…?...

இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸ் தந்த படக்குழு… ஆனா கடைசியில் இப்படி சொதப்பிடுச்சே…? – முகம் சுளித்த பார்வையாளர்கள்!

- Advertisement -

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் தனுஷ் டைரக்ட் செய்திருக்கிற 4வது படம் இது. அவரே இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு மீண்டும் நடிகை நித்யாமேனன் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இட்லி கடை படத்தில் சத்யராஜ் ராஜ்கிரண் பார்த்திபன் அருண் விஜய் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். குபேரா படத்தின் பலத்த ஏமாற்றத்துக்கு பிறகு வெளியாகும் தனுஷ் படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 14ம் தேதி அதாவது நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் தனுஷ் அருண் விஜய் சத்யராஜ் பார்த்திபன் ஜீவி பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் துவங்கி இரவு 12 மணி வரை இந்த விழா நீடித்தது.

இந்த விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு படக்குழு சார்பில் ஒரு சர்ப்ரைஸ் தரப்பட்டது. அதாவது வழக்கமாக இதுபோன்ற விழாக்களில் பார்வையாளர்களுக்கு சினேக்ஸ், தண்ணீர் பாட்டில் போன்றவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இட்லி கடை படக்குழு மற்றும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கிரியேட்டிவ் ஆக யோசித்துள்ளனர்.

- Advertisement -

அதன்படி விழாவுக்கு வந்த அனைவருக்கும் பார்சல் செய்த இட்லி பாக்கெட்டுகளை வழங்கி உள்ளனர். பொட்டலங்களை பிரித்தவர்களுக்கு உள்ளே மினி இட்லிகள் சட்னி சாம்பார் போன்றவை இருந்துள்ளது. ஆச்சரியப்பட்ட அவர்கள் சாப்பிட ஆர்வம் காட்டிய போது அதில் இருந்து கடுமையாக வாசம் வந்துள்ளது.

அதாவது பொட்டலங்கள் கட்டி சில மணி நேரம் ஆனதால் ஆவி பறக்க இருந்த சூடான இட்லி, ஆறி கெட்டுப்போய்விட்டது. முகம் சுளித்த பலரும் இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் புகார் தெரிவிக்க, இதென்னடா வம்பா போச்சு என மினி இட்லி பார்சல் வினியோகத்தை தடாலடியாக நிறுத்தியிருக்கின்றனர். இட்லி கடை படமும் நீண்ட நாட்கள் கழித்து தாமதமாக வருகிறது. இதே அனுபவம் தியேட்டரிலும் ஏற்படாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்