- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்கள் தற்குறிகள் அல்ல அம்புக்குறிகள் - ரஜினியின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு, நடிகர் ராகவா...

அவர்கள் தற்குறிகள் அல்ல அம்புக்குறிகள் – ரஜினியின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு, நடிகர் ராகவா லாரன்ஸ் ஓபன்டாக்!

- Advertisement -

கடந்த 2 தினங்களுக்கு முன்பு அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இன்று தனது ரசிகர்களை சந்தித்து பேசிய பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன்.

விரைவில் என் ரசிகர்களை அழைத்து மேடையில் என் தாயை அமர வைத்து அந்த நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன். நீங்கள் நினைத்தது நடக்கப் போகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இதனால்தான் அரசியலுக்கு வரலாமா என மக்களிடம் கேட்டேன். அதில் என்ன தவறு? நான் இனி ஏதாவது பெரிய முடிவு எடுத்தால் மக்களிடம் கேட்டுதான் செயல்படுவேன்.

- Advertisement -

புதிய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். புது இடத்தில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்றாலே அங்கு பழக ஒரு மாதம் ஆகும். அந்த வீட்டில் எது பிரச்சனை என்ன என்று தெரிந்துக்கொள்ள கொஞ்சம் கால நேரம் தேவை. தவெக ஆட்சி மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க பொறாமை தான் காரணம்.

அப்படி விமர்சனங்களை வைப்பதற்கு முன்பு நாம் என்ன செய்தோம் என்று யோசனை செய்துவிட்டு விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும். திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறானா என்பதை விரைவில் ரசிகர்கள் முன்பு அறிவிப்பேன். எல்லா கட்சியின் தலைவர்களும் எனக்கு நண்பர்கள் தான். அவர்களின் ஆசியை பெற்றுதான் என் முடிவை அறிவிப்பேன்.

- Advertisement -

ரஜினியின் ஆசிர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்வதில்லை. அவரின் ஆசிர்வாதத்தோடு தான் நான் எல்லாவற்றையும் செய்வேன். அண்ணாமலை நன்றாக படித்தவர். அரசியல் புரிதல் உள்ளவர். அவரைப் போன்ற புதியவர்கள் அரசியல் வருவது நல்லதுதான். தவெகவை தற்குறி என விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்குறி இல்லை அம்புக்குறிகள். அவர்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் தவெக வை வெற்றி பெற செய்துவிட்டார்கள்.

மக்களுக்கு யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என தெரியும். நான் மக்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் பணம் சம்பாதிக்கவோ வெறுப்பு அரசியல் செய்யவோ அரசியலுக்கு வர மாட்டேன். இப்போது 100 பேருக்கு உதவி செய்தால் அரசியலுக்கு வந்தால் லட்சம் பேருக்கு உதவி செய்வேன். பணம் முக்கியமில்லை. மனிதன் எப்படி வாழ்ந்தான், எப்படி மறைந்தான் என்பதே முக்கியம். நான் மறையும் போது இந்த ஊரே அழும் என்று ராகவா லாரன்ஸ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்