- Advertisement -
Homeபொழுதுபோக்கு13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களத்தில் இறங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம் - சுபாஷ் சந்திரபோஸ்...

13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களத்தில் இறங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம் – சுபாஷ் சந்திரபோஸ் பயோபிக் படத்தின் ஹீரோ அவரா?

- Advertisement -

மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் கவிஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை படமாக உருவாக்குவது நீண்டகாலமாக சினிமாவில் இருந்து வருகிறது. அந்த வகையில் நிறைய படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன.

உதாரணமாக தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படம் பெரியார் என்ற படத்தில் வெளியானது. அதில் பெரியாராக சத்யராஜ் நடித்திருந்தார். அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்தி தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே தமிழ் சினிமாவில் இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்டாலின் கேரக்டரில் நடிக்க இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார். இப்படி பல முக்கிய பிரபலங்களின் பயோபிக் படங்கள் எதிர்காலத்தில் வர உள்ளன.

தமிழ் சினிமாத்துறையில் பல பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அதில் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனமும் ஒன்றாகும். வசூல்ராஜா எம்பிபிஎஸ் குட்டி மயக்கம் என்ன நண்பன் கடல் மதகஜராஜா உள்ளிட்ட பல படங்களை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது. இது மட்டுமின்றி இந்த நிறுவனம் பல படங்களை விநியோகமும் செய்துள்ளது.

- Advertisement -

ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதால் அந்த நிறுவனம் தயாரித்த மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகள் முடங்கிப் போயிருந்த நிலையில் கடந்த ஆண்டு பொங்கலுக்குதான் திரைக்கு வந்தது. இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மீண்டும் படம் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் சுபாஷ் சந்திர போஸ் கேரக்டரில் ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்யன் ஷியாம் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஆனந்த் பிரசாத் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்துக்கான போட்டோ ஷூட் பணிகள் நடந்துள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் கடைசியா விமானத்தில் சென்றபோது காணாமல் போய்விட்டார் என்றுதான் இதுவரை தகவல் உள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இதுவரை உறுதி செய்யப்படாத மர்மமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்