வழக்கமாக தீபாவளி பொங்கல் தமிழ் புத்தாண்டு ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலகட்டங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் மோதுவதுதான் வழக்கமாக இருக்கும். வருகிற பொங்கலுக்கு விஜய் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் மோதுகின்றன. மேலும் ஜனநாயகன் படம் ரிலீஸாகிற அதே நாளில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜாசாப் படமும் ரிலீஸாகிறது.
இது மாதிரியான சூழலில் இப்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு அவர் நடித்த ஒரு படமே வில்லனாக மாறி தீபாவளிக்கு எல்ஐகே படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது. வழக்கமாக சில படங்களில் நாயகனே வில்லனாகவும் நடித்திருப்பார். ஆனால் அவர் நடித்த மற்றொரு படமே வில்லனாக மாறியிருப்பது விசித்திரம்தான்.
அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பல மாதங்களாக உருவான படம் எல்ஐகே. பிரதீப் ரங்கநாதன் நாயகனா நடித்த இந்த படம் முதலில் 2026 ஏப்ரலில் ரிலீஸ் என்றார். பிறகு பொங்கலுக்கு வரும் என்றார்கள். இப்போது வருகிற தீபாவளிக்கு என்று முடிவு செய்துவிட்டார்கள். மிக விரைவில் படத்தை சென்சாருக்கு அனுப்ப படக்கு தயாராகி விட்டது.
அதே போல் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாராகி விட்டது. அவர்களும் வருகிற 4ம் தேதி படத்தை சென்சாருக்கு அனுப்ப உள்ளனர். ஏற்கனவே குட்பேட் அக்லி படத்தை தயாரித்த வகையில் ரூ. 70 கோடி நஷ்டத்தை சந்தித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் டியூட் படத்தை தீபாவளிக்கு வெளியிட்டால்தான் லாபம் கிடைக்கும் என்று கருதுகிறது.
ஆனால் டியூட் படத்தின் பட்ஜெட் ரூ. 35 கோடிதான். ஆனால் எல்ஐகே படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை என்று சொல்லப்படுகிறது. இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மீள முடியாது என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமும் ஒருபுறம் கதறுகிறது. அதனால் இரு தரப்புமே தீபாவளி பண்டிகை நாளில் படங்களை ரிலீஸ் செய்ய முயற்சிக்கின்றன.
இந்த சூழலில் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனை தனித்தனியாக அணுகிய டியூட் எல்ஐகே படங்களின் தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்து பேசியிருக்கின்றனர். அவங்களை தீபாவளிக்கு அப்புறமா வரச் சொல்லுங்க, தீபாவளிக்கு நாங்க வர்றோம் என்று இருவருமே கூறியிருக்கிறேன். இரண்டுமே என்னுடைய படம். இருவருமே என்னுடைய தயாரிப்பாளர்கள். இதில் யாரை நான் தீபாவளிக்கு கழிச்சு வாங்க என்று சொல்ல முடியும்? என்று பிரதீப் ரங்கநாதனும் அவர்களிடம் திருப்பிக் கேட்டு புலம்பியிருக்கிறார். தீபாவளி அன்றுதான் இந்த விவகாரத்துக்கு ரசிகர்களுக்கு பதில் கிடைக்கும்.





