- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் ஹீரோக்களுக்கு கிடைக்கும் மதிப்பு, மரியாதை நடிகைகளுக்கு கிடைப்பதில்லை - ஓபனாக பேசிய தனுஷ் பட...

சினிமாவில் ஹீரோக்களுக்கு கிடைக்கும் மதிப்பு, மரியாதை நடிகைகளுக்கு கிடைப்பதில்லை – ஓபனாக பேசிய தனுஷ் பட நடிகை!

- Advertisement -

பாலிவுட்டில் நடந்த 1992ம் ஆண்டில் இந்தி படம் ஒன்றில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் கஜோல். இன்று தென்னிந்திய சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். அவரது கணவர் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற படத்தில் நடிகை கஜோல் நாயகியாக நடித்திருந்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய மின்சார கனவு படத்தில் அரவிந்த்சாமி பிரபுதேவா நாசர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2017ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லாத பட்டதாரி 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் காஜல் நடித்திருந்தார். இந்த படத்தில் கார்பரேட் முதலாளியாக கன்ஸ்ட்ரக்சன் அதிபராக அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

பாலிவுட்டில் 51 வயதுகளை கடந்த நிலையிலும் தனது தனித்துவமான நடிப்பால் கவர்ச்சியால் கனவுக்கன்னியாக ரசிகர்களை கஜோல் இப்போதும் வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை கஜோல், சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அப்போது நடிகை கஜோல் கூறியதாவது, படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களுக்கு கிடைக்கும் பல விஷயங்கள் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் நடிகைகளுக்கு பெரிய அளவில் மதிப்பு தர மாட்டார்கள். தற்போது அந்த நிலை பெருமளவில் மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.

படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ நடிகர்களை போல பெண்களையும் மதிக்க வேண்டும். நடிகைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகை கஜோல் வலியுறுத்தி பேசினார். பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்