- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ பட பாடலால் எழுந்த சர்ச்சை, விஜய் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர்

லியோ பட பாடலால் எழுந்த சர்ச்சை, விஜய் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர்

- Advertisement -

“லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலான “நா ரெடிதான் வரவா?” பாடல் கடந்த விஜய் பிறந்தநாள் அன்று வெளிவந்தது. இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியிருந்தார். அனிருத் இசையில் இந்த பாடல் மிகவும் துள்ளல் ரகத்தில் இருந்தது. அதே போல் இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பலவும் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து மறைமுகமாக எழுதப்பட்ட வரிகள் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்த பாடலுக்கான அறிவிப்பு போஸ்டர் வெளிவந்ததில் இருந்தே விஜய்யின் தோற்றம் குறித்த பல சர்ச்சைகள் வெடித்தன. அதாவது விஜய் தனது வாயில் சிகரெட் வைத்திருந்தார். விஜய்க்கு பள்ளி செல்லும் சிறுவர்/சிறுமிகளே அதிகமான ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆதலால் விஜய் இவ்வாறு சிகரெட் பிடிப்பது போல் தென்படுவது மாணவர்களிடம் தவறான வழியை ஊக்குவிக்கும் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

அதன் பின் அப்பாடல் வெளிவந்தபோது அப்பாடல் முழுவதிலும் விஜய் வாயில் சிகரெட்டுடனே வலம் வந்தார். இது ஒரு பார்ட்டி பாடல் எனவும் ஆதலால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவர் தென்படுகிறார் எனவும் ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வந்தாலும் விஜய் சிகரெட்டுடன் தென்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மீது தற்போது வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. அதாவது சென்னையை சேர்ந்த செல்வம் என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நா ரெடிதான் பாடல் உருவாகி உள்ளதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்