- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவே இனி வேண்டாம் என்று குட்பை சொல்ல நினைத்தேன் - அவரால் தான் மீண்டும் நடிக்க...

சினிமாவே இனி வேண்டாம் என்று குட்பை சொல்ல நினைத்தேன் – அவரால் தான் மீண்டும் நடிக்க வந்தேன் – ஒபனாக பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகர் நடிகைகள் சொற்பமான எண்ணிக்கையில் படங்களில் நடித்தாலும் அவர்களது அழகு நடிப்பாற்றல் போன்றவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் நிவேதா பெத்துராஜ். 10க்கும் குறைவான படங்களில் தான் தமிழில் அவர் இதுவரை நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட அவர் சிறு வயதிலேயே துபாயில் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

- Advertisement -

தொடர்ந்து 2017ம் ஆண்டில் உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்தார். அதன்பிறகு மெண்டல் மதிலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நிவேதா பெத்துராஜ் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்திய நிவேதா பெத்துராஜ் நடிகர் ரவிமோகனுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். அதன்பிறகு நடிகர் விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் எஸ்ஐ கேரக்டரில் கெத்தாக நடித்திருந்தார். மேலும் 2019ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்திலும் முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழ் திரை உலகில் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம்வந்த நிவேதா பெத்துராஜ் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பிறகு மீண்டும் சினிமாவில் இப்போது நடிக்க துவங்கியிருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது, கடந்த 2023ம் ஆண்டுடன் சினிமாவுக்கு குட் பை சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் விதி என்னை எதிர்பாராத பாதையில் அழைத்துச் சென்றது.

சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் என்னை விதி கொண்டு வந்து சேர்த்தது. என்னை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்ததற்காக இயக்குனர் நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி. மீண்டும் சினிமாவுக்கு அவர் என்னை அழைத்து வந்திருக்காவிட்டால் இந்நேரம் நான் இமயமலைக்கு சென்று இருப்பேன் என்று நிவேதா பெத்துராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்