சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, மாநகரம் படத்தில் லோகேஷ் கனகராஜை இயக்குனராக அறிமுகப்படுத்தியது தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுதான். அடுத்த படத்தை பண்ணும்போது லோகேஷ் கனகராஜூக்கு 4 மடங்கு 5 மடங்கு வரை அவர்கள் சம்பளத்தை அதிகரித்து கொடுக்கின்றனர்.
அடுத்து கைதி படம் பண்றார். அது சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இருந்தது. அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவங்களுக்கு தான் பண்ணி இருக்கணும். ஆனால் பெரிய நடிகர்கள் கூப்பிடறாங்க என்றவுடன் உடனே வெளியே சென்று விடுகிறார்கள். யார் அவங்களுக்கு பிள்ளயைார் சுழி போட்டு ஆரம்பிச்சு வெச்சாங்களே அவங்களுக்கு அடுத்தடுத்த படங்களை செய்வது இல்லை.
பணம் எங்கே ஜாஸ்தி கிடைக்குதோ அங்கே போய்விடுகிறார்கள். பணம் சம்பாதிங்க வேண்டாம்ன்னு சொல்லலே. ஆனால் அடையாளம் தெரியாத உங்களை முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு நீங்க விசுவாசமாக இல்லை என்பதுதான் எனக்கு வருத்தம்.
அவங்க அறிமுகம் செய்த இயக்குனர் எச் வினோத், கருப்பு படம் ரிலீஸ் நேரத்தில் சிக்கல் ஏற்பட்ட போது அவரே போன் செய்து நான் வேணும்னா 1 கோடி ரூபாய் தருகிறேன். நீங்க பயன்படுத்திக்கங்க என்றும் சொல்லியிருக்கிறார். உண்மையில் அந்த தம்பியை நான் பாராட்டுகிறேன்.
கருப்பு படத்துக்கு ஒரு சிக்கல் என்றதும் அமெரிக்காவில் இருந்தாலும் லண்டனில் இருந்தாலும் நீங்க எல்லாம் போன்ல கூப்பிட்டு சொல்லணும். ஏன்னா நீங்க எல்லாம் இப்போ ஒரு பொசிஷன்ல இருக்கறீங்க. கருப்பு படம் ரிலீஸில் என்ன சிக்கல், நான் என்ன பண்ணனும் என்று கேட்கணும். அந்த காலத்தில் ஏவிஎம் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு விஷயத்தை செய்வார்கள்.
அதாவது ஒரு நடிகர் ஒரு நடிகை ஒரு இயக்குனரை அவர்கள் அறிமுகம் செய்தால் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு விடுவார்கள். அந்த 5 ஆண்டுகளுக்கு அவர்கள் நிறுவனத்துக்கோ அல்லது அவர்கள் சொல்கிற நிறுவனத்துக்கோ தான் படம் செய்ய முடியும். அதை எல்லாம் இப்போது இருக்கிற தயாரிப்பாளர்கள் பண்ண வேண்டும். பண்ணலையே என்று நான் வருத்தப்படுகிறேன். அப்படி செய்யணும். அப்படி செய்தால்தான் தயாரிப்பாளர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று திருப்பூர் சுப்ரமணியம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





