- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்வின் இறுதி வரை கரும்பை விரும்பாத கவிஞர் நா முத்துக்குமார் - பாவா செல்லதுரை சொன்ன...

வாழ்வின் இறுதி வரை கரும்பை விரும்பாத கவிஞர் நா முத்துக்குமார் – பாவா செல்லதுரை சொன்ன அந்த உருக்கமான தகவல்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் எழுத்தாளர் பாவா செல்லதுரை கவிஞர் நா முத்துக்குமார் குறித்து பேசியதாவது, எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கையை பிடித்து நா.முத்துக்குமாரை அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி ஒரு வாழ்வியலை கடைசி வரை வாழ்ந்தவர். அவரது மனதில் ஒரு போராட்டம் இருந்தது.

அதாவது நான் கவிஞரா இல்லை மிகச் சிறந்த பாடலாசிரியரா என்ற போராட்டம் இருந்தது. கவிதைகளைவிட மிக பிரமாதமாக பாடல்கள் எழுதினார். அப்படியென்றால் நான் எழுதிய கவிதைகள் என்ற பெரிய கேள்வி இருந்தது. இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் நா.முத்துக்குமார் சவாரி செய்து வந்தார். பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன்.

- Advertisement -

எனக்கு தெரிந்து தமிழ் திரைப்பட உலகில், தமிழ் பாடலாசிரியர்களில் முத்துக்குமார் அளவுக்கு தொடர்ச்சியாக வாசித்து கொண்டிருந்த, தீவிரமான வாசிப்பாளரை நான் பார்த்ததில்லை. எத்தனை பெரிய புத்தகத்தை கொடுத்தாலும் அதை 2 நாட்களில் முத்துக்குமார் முழுமையாக வாசித்து முடித்துவிடுவார்.

இதுதான் அவரது படைப்புகளுக்கு காரணமாக இருந்தது. வார்த்தைகளுக்காக ஏங்கி நிற்கும் நிலை இல்லை. சங்க இலக்கியத்திலிருந்து நவீன கவிதைகள் வரை அனைத்தையும் அவர் வாசித்துவிடுவார். ஒரு போதும் நான் இவ்வளவு புத்தகங்களை வாசித்திருக்கிறேன் என முத்துக்குமார் எந்த மேடையிலும் சொன்னதில்லை.

- Advertisement -

முத்துக்குமார் 7 வயதில் தனது தாயை இழந்துவிட்டார். இந்த விஷயத்தை என் வீட்டில் படுக்கை அறையில் என் மடியில் படுத்துக் கொண்டு அவர் சொன்னார். 7 வயதில் தனது அம்மா இறந்துவிட்டார். சிறிய குழந்தையான முத்துக் குமாருக்கு இறப்பு பற்றி அறியாத வயது. அவரது தாயின் உடலை ஒரு பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்களாம். அப்போது முத்துக்குமார் குழந்தையாக இருந்ததால் அழாமல் இருக்க பக்கத்தில் போன ஒரு டிராக்டரில் இருந்து கரும்பு துண்டை உடைத்து எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார்களாம்.

அன்றுதான் அவர் முதலும் கடைசியுமாக கரும்பை சாப்பிட்டது. கரும்பை நான் சாப்பிடும் போதெல்லாம் என் அம்மாவை இழந்ததுதான் நினைவுக்கு வரும். அதனால் நான் கரும்பை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். அம்மா மறைவின் கசப்பை நான் விழுங்க வேண்டும் என்பதற்காக எனக்கு கரும்பை கொடுத்தார்கள் என அழுதபடியே சொன்னார் என்று பாவா செல்லத்துரை அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்