- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனந்தன் காடு படத்தின் கதைக்களம் இதுதான் - 2 மொழிகளில் வெளியீடு ஏன்? தனது 40வது...

அனந்தன் காடு படத்தின் கதைக்களம் இதுதான் – 2 மொழிகளில் வெளியீடு ஏன்? தனது 40வது படம் குறித்தும் முக்கிய அப்டேட்டுகளை தந்த நடிகர் ஆர்யா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் ஆர்யா. வித்யாசமான கதை மற்றும் நல்ல கேரக்டர்களை அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மிஸ்டர் எக்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இதற்கிடையே ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் அனந்தன் காடு என்ற படத்தில் ஆர்யா நடித்துள்ளார்.

- Advertisement -

மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரித்த இந்த படத்தில் நிகிலா விமல் இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் அனந்தன் காடு படம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்யா பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அனந்தன் காடு படம் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது, இந்த படத்தின் கதை திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டது. அதனால் பாதி தமிழ் பாதி மலையாளம் படத்தில் வரும். இதை இரண்டு மொழிகளில் தனித்தனியாக எடுக்கலாமா அல்லது மலையாளத்தில் மட்டும் எடுத்து தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாமா என்ற குழப்பம் இருந்தது.

- Advertisement -

இறுதியில் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்க முடிவு செய்தோம். இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள அனந்தன் காடு படத்தை விரைவில் தமிழகத்தில் வெளியிட உள்ளோம். இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும். இதற்குப் பிறகு எனது 40வது படத்தில் நான் நடிக்க உள்ளேன். அது முழுக்க முழுக்க காமெடி மற்றும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நடிகர் ஆர்யா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்