- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகாமல் முடங்கிய கிடங்கும் படங்கள், வாய் திறந்து ஏன் என்று கேட்காத...

தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகாமல் முடங்கிய கிடங்கும் படங்கள், வாய் திறந்து ஏன் என்று கேட்காத ஹீரோக்கள் – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

ஒரு திரைப்படத்துக்கு முதுகெலும்பாக இருப்பவர் தயாரிப்பாளர் தான். பல கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு படத்தை தயாரிக்க வரும் அவர்தான் அந்த படத்துக்கு முதுகெலும்பாய் இருக்கிறார். படம் ஒருவேளை தோல்வியடைந்தால் அதன் மொத்த நஷ்டமும் தயாரிப்பாளர் தலையில் தான் விழுகிறது. ஹீரோ இயக்குனர் யாரும் அந்த நஷ்டத்தில் பங்கு கொடுப்பதில்லை.ஆனால் ரஜினி கமல் விஜயகாந்த் சூர்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தயாரிப்பாளர்களின் நஷ்டம் குறித்து கவலைப்படுகின்றனர்.

அவ்வப்போது படம் நஷ்டமடைந்தால் தங்களால் முயன்ற உதவிகளை ஏதேனும் விதத்தில் பதிலீடாக செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான ஹீரோக்கள் தங்களது படம் ரிலீஸ் ஆகி திரைக்கு வருகிறதா, இல்லையா என்று கூட கவலைப்படுவது இல்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, ஒரு படம் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் மட்டுமே வெற்றி அடையும்.

- Advertisement -

மதகஜ ராஜா போன்ற சில படங்கள் வேண்டுமானால் 12 ஆண்டுகள் கழித்து வந்தும் பெரிய வெற்றி பெறலாம். இது எல்லா படத்துக்கும் பொருந்தாது. தமிழ் சினிமாவில் இப்போது 42 படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதில் ஜீவி பிரகாஷ்குமார் நடித்த படங்கள் மட்டும் 5 படங்கள் பெண்டிங் இருக்குது. அவர் நடித்த அடங்காதே இடி முழக்கம் 4ஜி ஆயிரம் ஜென்மங்கள் 13 என இந்த மாதிரி 5 படங்கள் அப்படியே நிற்கிறது. இதுபற்றி யாராவது முயற்சி எடுத்து என்ன காரணம் என்று தயாரிப்பாளரிடம் பேசி இருக்கிறார்களா?

யாரும் பேசுவது கிடையாது. எந்த இயக்குனரோ எந்த ஹீரோவோ இதுபற்றி முயற்சி செய்வது இல்லை. ஆனால் சில இயக்குனர்கள் நான் படத்தை முடித்து விட்டேன். ஆனால் இன்னும் ரிலீஸ் செய்யாமல் உள்ளனர். ரொம்பவும் மனம் வேதனையாக இருக்கிறது என்று வீடியோ போடுகின்றனர். அப்புறம் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் அப்புறம் டிரெயின் என 2 படங்கள் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

- Advertisement -

டிரெயின் தாணு சார் தயாரித்த படம். 2 ஆண்டுகளாக படம் ரிலீஸாகாமல் உள்ளது. இப்படி லேட் ஆக லேட் ஆக படங்களும் பாதிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அவங்க அடுத்த படம் எடுக்க போக முடிய மாட்டேங்குது. நீண்ட நாட்களாக வெளிவராத விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி எப்படியாவது அந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம்.

ஆனால் ஒருமுறை கூட அதுகுறித்து விக்ரம் எங்களிடம் பேசியது இல்லை. ஏன் என்றால் நாங்கள் பணம் கேட்டு விடுவோம் என்று நினைக்கிறார். ஏன் கொடுத்தால் என்ன குறைந்து விடும்? 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் 1 கோடி ரூபாய் ஹீரோவின் பங்களிப்பாக தந்து உதவலாமே? ஆனால் யாரும் அப்படி உதவ முன்வருவது இல்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்