- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளில் வாய் திறக்காத பிரபல நடிகை - வாழ்த்து சொல்ல...

தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளில் வாய் திறக்காத பிரபல நடிகை – வாழ்த்து சொல்ல மறந்த உச்ச நட்சத்திர நடிகர், கமல் முந்திக்கிட்டாரே?

- Advertisement -

தமிழக முதல்வர் தவெக கட்சி தலைவர் விஜய்க்கு இன்று 52வது பிறந்த நாள். இன்று நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதே போல் பாரத பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் தங்களது வலைதள பக்கங்களில் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

அத்துடன் தவெக கட்சி சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜை பொதுமக்களுக்கு அன்னதானம் இனிப்பு வழங்குதல் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் பொது மருத்துவ முகாம் போன்ற நிகழ்ச்சிகளை தவெக கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்காதது இணையத்தில் சர்ச்சையாக எழுந்துள்ளது. தமிழக முதல்வரான பிறகு நடிகர்கள் கமல்ஹாசன் விஷால் கார்த்தி சிவக்குமார் சூர்யா பார்த்திபன் பிரபு விக்ரம் பிரபு என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

- Advertisement -

நடிகைகள் சமந்தா சினேகா சிம்ரன் குஷ்பு என பலரும் விஜய்க்கு நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை சொல்லவில்லை. இந்த சம்பிரதாயமான சந்திப்பில் எனக்கு விருப்பமில்லை என்று அவரே கூறியிருக்கிறார். ஆனால் இன்று விஜய்க்கு ரஜினி தரப்பில் இருந்து பிறந்த நாள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படவில்லை.

அதே போல் முதல்வர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான தோழி திரிஷா. அவர் தேர்தலில் வெற்றி பெற்ற போது நேரில் பூங்கொத்துடன் சென்று வாழ்த்துகளை தெரிவித்தவர் திரிஷா. ஆனால் இன்று அவர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை விஜய் திரிஷா சர்ச்சை தொடர வேண்டாம் என்று அவர் தனிப்பட்ட முறையில் விஜய்க்கு வாழ்த்துகளை கூறியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்