திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் – நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மகள் நடிகை ஜான்வி கபூர். இந்தியில் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் நடிகர் ராம்சரண் நடித்த பெத்தி படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்தது பெரிய அளவில் சர்ச்சையானது. பெத்தி படத்தின் இயக்குனரும் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பகீரத முயற்சிகள் நடந்து வருகிறது. அதிலும் சில முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்களில் ஜான்வி கபூரை நாயகியாக கமிட் செய்யும்போது தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
அந்த ஆசை எந்த தமிழ் பட ஹீரோவுக்கும் நிறைவேறவே இல்லை. அதற்கு முக்கிய காரணம் நடிகை ஜான்வி கபூரின் அப்பா போனி கபூர்தான். அவருக்கு தமிழ் சினிமா துறையினருடன் நெருக்கமான நட்பு உண்டு. அஜீத்குமார் நடித்த சில படங்களை அவரே தயாரித்துள்ளார். வேறு சில படங்களையும் அவரே தயாரித்துள்ளார்.
அதனால் தமிழ் சினிமாவில் எந்த ஹீரோ படம் என்றாலும் எந்த இயக்குனர் படம் என்றாலும் அவர்களை பற்றிய ஒரு ஸ்கேன் செய்த பிறகு அந்த படம் வேண்டாம். ஜான்வி கபூர் அந்த படத்தில் நடிக்க மாட்டார் என்று ரெட் சிக்னல் காட்டி விடுகிறார். அதனால் பல நட்சத்திர நடிகர்கள் ஜான்வி கபூருடன் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கமல் நடித்த களவாணி படத்தை இயக்கியவர் இயக்குனர் சற்குணம். அவர் இயக்கும் ஒரு தமிழ் வெப் சீரிஸில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். நாயகியை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸ்க்கு குறத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்க உள்ளது.
ஏற்கனவே கரையை கடந்த குறத்தி என்ற டைட்டில் ஒரு படம் வெளியானது பயங்கர சர்ச்சையானது. அதன்பிறகு அத கரை கடந்த உருளி என டைட்டில் மாற்றப்பட்டது. அந்த நிலையில் இப்போது குறத்தி என்ற பெயரில் வெப் சீரிஸ் இயக்குவது வரும் நாட்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனினும் குறத்தி வெப் சீரிஸை நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பதும் கவனிக்கத்தக்கது.





