- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகையும் நானும் ஒண்ணாக முடியாது, அவங்களை மாதிரி என்கிட்ட எதிர்பார்க்கவும் கூடாது - ஓபனாக...

அந்த நடிகையும் நானும் ஒண்ணாக முடியாது, அவங்களை மாதிரி என்கிட்ட எதிர்பார்க்கவும் கூடாது – ஓபனாக பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. கட்டாகுஸ்தி மாமன் பொன்னியின் செல்வன் மாயநதி பொன்னியின் செல்வன் 2 ஜகமே தந்திரம் தக்ஃலைப் ஆக்சன் கேப்டன் கார்கி உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இந்த படங்கள் அவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்துள்ளது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் படகோட்டி பெண்ணாக அவர் நடித்திருந்தார். சின்ன கேரக்டர் என்றாலும் அந்த கேரக்டர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்த ஒரு பாத்திரமாகும். அதே போல் மாமன் படத்திலும் சூரிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

திருமண வயது கடந்தும் இன்னும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். அவர் பங்கேற்ற நேர்காணலில் அவரது திருமணம் குறித்த கேள்விக்கும் எனக்கு திருமணத்தில் அவ்வளவாக ஆர்வமோ விருப்பமோ இல்லை. வாழ்க்கையில் மிக அவசியமானதாக திருமணம் எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை போலவே இன்று தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பல முன்னணி நடிகைகள் திருமணம் குறித்து ஆர்வமின்றி முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் திருமண உறவில் ஆர்வமின்றி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வருகிற ஜூலை 3ம் தேதி கட்டா குஸ்தி 2ம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று கேள்வி கேட்கின்றனர்.

நான் நடிக்கும் கதாபாத்திரம் பெரியதா சிறியதா என்பது முக்கியமல்ல. அந்த கதை திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். எல்லோராலும் ராஷ்மிகா மந்தனா ஆக முடியாது. முழு நீள கமர்சியல் கதாநாயகி கேரக்டர்களை அவர் மிகவும் நளினமாக செய்கிறார். அந்த மாதிரி நடனம் ஆடவும் முழுமையான கமர்சியல் ஹீரோயினாகவோ என்னால் இருக்க முடியாது. அது மிகவும் கடினமான விஷயம் என்று ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்