- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் திரைப்படத்தை பார்த்து விட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் - என்ன சொல்லியிருக்காரு பாருங்க ?

ஜெயிலர் திரைப்படத்தை பார்த்து விட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க ?

- Advertisement -

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படமானது ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு கடைசியாக “பீஸ்ட்” திரைப்படத்தை இயக்கிய நெல்சன் அடைந்த தோல்வியும், அண்ணாத்த படத்தில் ரஜினி அடைந்த தோல்விக்கு பிறகு வெளியாகியுள்ள இந்த ஜெயிலர் திரைப்படமானது இவர்கள் இருவருக்கும் ஒரு பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் வெளியாகிய இந்த ஜெயிலர் திரைப்படமானது உலகெங்கிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ள வேளையில் தற்போது வசூலிலும் பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள வேளையில் மேலும் சில சாதனைகளை செய்ய ஜெயிலர் திரைப்படமானது காத்திருக்கிறது.

MK-Stalin

இவ்வேளையில் திரைப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் : நெல்சன் திலீப் குமாரை நேரில் அழைத்து பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நெல்சன் திலீப் குமார் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திரைப்படத்தை பார்த்து பாராட்டியதற்கும், ஊக்குவித்திருக்கும் மிகவும் நன்றி உங்களுடைய வார்த்தைகள் எங்களுடைய குழுவை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன்ம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் நெல்சன் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஸ்டாலின் படத்தை நேரடியாக கண்டு களித்தது அவர்களை பாராட்டியது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்