- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் நடிகர் ரஜினியுடன் இணைந்த நடிகை சிம்ரன், இந்த வாய்ப்பு கிடைக்க அவர்தான் காரணமா? -...

மீண்டும் நடிகர் ரஜினியுடன் இணைந்த நடிகை சிம்ரன், இந்த வாய்ப்பு கிடைக்க அவர்தான் காரணமா? – ஆனா அவருக்கே வாய்ப்பு இல்லாம போயிடுச்சே!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சிம்ரன். குறிப்பாக வாலி அவள் வருவாளா ஏழுமலை பஞ்சதந்திரம் பம்மல் கே சம்பந்தம் நட்புக்காக அரசு தமிழ் போன்ற படங்கள் வெளியான போது சிம்ரன் நட்சத்திர நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அவரது நடனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பும் இருந்தது.

நிறைய படங்களில் நடித்த சிம்ரன் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்வில் செட்டிலாகி விட்டார். மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் சீமராஜா படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார்.

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடிகை சிம்ரன் 2 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஏனெனில் இந்த படத்தின் பிளாஸ்பேக் காட்சியில் ரஜினியின் மனைவியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேட்ட படத்தில் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சிம்ரன் இருந்தார் என்பதும் குறையாக அப்போது பேசப்பட்டது.

கடந்தாண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் நடிகை சிம்ரனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதில் 2 பிள்ளைகளுக்கு தாயாக சசிக்குமாரின் மனைவி கேரக்டரில் சிம்ரன் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து நடிகை சிம்ரனுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்துதான் நவிக்கிறார்.

- Advertisement -

அந்த படத்தைத் தொடர்ந்து இப்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்திலும் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கு முன்பு ரஜினி படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் அவர்தான் அந்த படத்துக்காக நடிகை சிம்ரனை கமிட் செய்திருந்தார்.

ஆனால் ரஜினி படத்தை அவர் இயக்காத நிலையிலும் நடிகை சிம்ரன், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக தொடர்கிறார். அதற்கு முக்கியமான காரணம் அந்த படத்துக்கு தந்த அட்வான்ஸ்சை திருப்பி கேட்க முடியாது என்பதால் தான் இந்த படத்தில் ரஜினிக்கு மீண்டும் 2ம் முறையாக நடிகை சிம்ரன் ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிபி சக்ரவர்த்திக்கே வாய்ப்பு இல்லாத போது அவரால் கமிட் செய்யப்பட்ட சிம்ரனுக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்